வீட்டில் பாம்பு வளர்த்த தல அஜித் மேனேஜர்...!! எலிகளை உணவாக வழங்கி வந்ததாக அதிர்ச்சி..!!

Published : Dec 18, 2019, 12:28 PM IST
வீட்டில் பாம்பு வளர்த்த தல அஜித் மேனேஜர்...!!  எலிகளை உணவாக வழங்கி வந்ததாக அதிர்ச்சி..!!

சுருக்கம்

இந்நிலையில் சுரேஷ்  சந்திராவும்,  நாசரும் மூன்று அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்றை வீட்டில் வளர்த்து வந்துள்ளனர்.  

நடிகர் அஜித்தின் மேனேஜர் வீட்டில் பாம்பு வளர்த்து வந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  நடிகர் அஜித் என்றாலே தமிழகத்தில் இளைஞர்களுக்கு  அளப்பரிய  பிரியம்  உண்டு ,  ஏராளமான ரசிகர்களை தன்னுடைய நடிப்பு ஆற்றலால் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார் நடிகர் அஜித் .  அவர் ஒன்றைச் சொன்னால் அதை தலைமேல் ஏற்று செய்யக்கூடிய ரசிகர்கள் தமிழகத்தில்  ஏராளமானோர் உள்ளனர்.  

அப்படிபட்ட  நடிகரின் மேலாளராக இருப்பவர் செய்துள்ள செயலால்  திரையுலகில் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள  அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  தல அஜித் குமாரின் மேலாளராக பல ஆண்டுகளாக இருந்து வருபவர் சுரேஷ் சந்திரா ,  அவரது  உதவியாளர் நாசர் ,  இவர்கள் திரைப்படங்களுக்கு பிஆர்ஓக்களாக இருந்து வருகினர்,  அதேபோல்  நட்சத்திர கலை நிகழ்ச்சிகள் எனப்படும்  நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைக்கும் ஈவென்ட் மானேஸ்மென்ட்  நடத்தி வருகின்றனர். காட்டு விலங்குகளை  வீட்டில் வளர்ப்பது கூடாது என சட்டம் நிலுவையில் இருந்து வருகிறது . இந்நிலையில் சுரேஷ்  சந்திராவும்,  நாசரும் மூன்று அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்றை வீட்டில் வளர்த்து வந்துள்ளனர்.

 அதற்கு உணவாக எலியை வழங்கி வந்துள்ளனர்.  இந்த விஷயம்  மெல்ல  வெளியில் கசிய ஆரம்பித்தது , அது வனத்துறை அதிகாரிகளின் காதுகளுக்கும் எட்டியது உடனடியாக வனத்துறை அதிகாரிகள் அவர்களின் இல்லத்திற்கு நேரில் வந்து  அவர்கள் வளர்த்து வந்த  மலைப்பாம்பை கைப்பற்றியுள்ளனர் . அத்துடன் அவர்கள்  மீது வனவிலங்கு சட்டப்படி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின ஆனால் இதுகுறித்த தகவல்களை உறுதிசெய்யப்படவில்லை . 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?