தமிழ் படத்தில் அறிமுகமாகும் நடிகை லிசி - பிரியதர்ஷன் மகள்...!

 
Published : Jun 17, 2018, 05:00 PM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
தமிழ் படத்தில் அறிமுகமாகும் நடிகை லிசி - பிரியதர்ஷன் மகள்...!

சுருக்கம்

actress lissy daugther commeted in tamil film

தென்னிந்திய சினிமாவில், பிரபல இயக்குனராக இருக்கும்  பிரியாதர்ஷன் மற்றும் பிரபல நடிகை லிசியின் மகள் கல்யாணி தற்போது தமிழில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகை லிசியும் இயக்குனர் பிரியதர்ஷனும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர்கள். இவர்களுக்கு கல்யாணி என்கிற மகளும், சித்தார்த் என்கிற மகனும் உள்ளனர்.

கடந்த 2014 ஆண்டு லிசியும் - பிரியதர்ஷனும், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து, இருவரும் தனித்தனியே வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இவர்களுடைய மகள் கல்யாணி ஏற்கனவே தெலுங்கில் நடிகர் நாகார்ஜுனா மகன் அகிலுக்கு ஜோடியாக 'ஹலோ' திரைப்படத்தில் அறிமுகமானார்.  இதைதொடர்ந்து நடிகர் சர்வானந்த் ஜோடியாகவும் ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் தொடர்ந்து தெலுங்கு படங்களில் கமிட் ஆகி வரும் இவர், தற்போது தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!