
திருமணத்திற்கு பின் திரையுலகை விட்டு முழுமையாக ஒதுங்கிய நடிகை லைலா, தற்போது மீண்டும் நடிக்க கதை கேட்டு வருகிறார். இவரிடம் கதை சொல்ல வருபவர்கள் அனைவரும் லைலா சொல்லும் ஓரே வார்த்தையை கேட்டு விட்டு அலறி அடித்து ஓடுகிறார்களாம்.
'கள்ளழகர் 'படத்தின் மூலம் விஜயகாந்துக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லைலா. இந்த படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழில் நடிக்க இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது. பின் அர்ஜுன், சூர்யா, அஜித், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.
இவர் 16 வயதில் அறிமுகமானது ஹிந்தி திரைப்படம் என்றாலும், தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் தான் அதிகமாக நடித்தார்.
இவர் முன்னணி நடிகையாக இருக்கும் போதே.. அதாவது இவருடைய 20 வயதில் இரானை சேர்ந்த மெஹதீன் என்ற ஒரு தொழில் அதிபருடன் காதல் வயப்பட்டர். கிட்டத்தட்ட 7 வருடங்கள் காதலித்த பின்னர், பெற்றோர் அனுமதியுடன் இருவரும் கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் கண்டிப்பாக நடிக்கப்போவதில்லை என கூறினார்.
அவர் கூறியது போலவே, திருமணம் ஆகி, 13 வருடங்கள் எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது இவருடைய இரண்டு மகன்களும் நன்கு வளர்ந்து விட்டதால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தலாம் என முடிவு செய்துள்ளார் லைலா. அதனால் சமீபத்தில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் மீண்டும் நல்ல கதை அமைந்தால் நடிப்பேன் என கூறி இருந்தார்.
இதனால் வயதான பிறகும் கூட கன்னக்குழி அழகியிடம் பல இயக்குனர்கள் அண்ணி, அக்கா போன்ற வேடங்களில் நடிக்க கூறி கதை சொல்லி வருகிறார்களாம். ஆனால் நடிகையோ ஒரே வார்த்தையில் நடித்தால் கதாநாயகையாக தான் நடிப்பேன், அண்ணி, அக்கா கதையில் நடிக்க விருப்பம் இல்லை என கூறி இயக்குனர்களையும் தயாரிப்பாளர்களையும் தெறித்து ஓட வைக்கிறாராம். ஒரு சிலர் உங்களுக்கு ஏற்ற மாதிரி கதை தயார் பண்ணிட்டு வருகிறேன் எனவும் சொல்லி இருக்கிறார்களாம். என்னதான் நடக்குதுன்னு பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.