தமிழ் சினிமாவில் முதல் முறையாக சிவகார்த்திகேயன் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அலெஸ்சா எல்.எப்!

By manimegalai aFirst Published Feb 1, 2019, 5:01 PM IST
Highlights

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வந்த சீமராஜா, திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெற வில்லை. எனவே இந்த படத்தை தொடர்ந்து தான் நடிக்கும் படங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.
 

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வந்த சீமராஜா, திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெற வில்லை. எனவே இந்த படத்தை தொடர்ந்து தான் நடிக்கும் படங்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.

அந்த வகையில் அடுத்ததாக, நேற்று இன்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த படத்தை பற்றி இயக்குனர் ரவிகுமார் கூறியதாவது... இந்த திரைப்படம் அறிவியல் சார்ந்த படமாக உருவாகிறது.  இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார்.  ஏஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். ஸ்டுடியோ சார்பில் ஆர் டி ராஜா தயாரிக்கிறார்.

ஏற்கனவே, இந்த படத்தின் 60% படப்பிடிப்பு முடிவடைந்து முடிவடைந்து. மேலும் இந்த படத்தில் அறிவியல் சார்ந்த காட்சிகள் அதிகமாக உள்ளதால் நூற்றுக்கும் மேற்பட்ட ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு இரவு பகலாக பணியாற்றி வருகிறார்கள்.

ஹாலிவுட் படங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட அலெக்சாஎல்.எப் என்ற அதி நவீன கேமரா இந்த படத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த அதிநவீன கேமரா பயன்படுத்தப்படும் முதல் தமிழ்ப்படம் இதுதான்.

மேலும், படப்பிடிப்பு சென்னை ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடந்தது.  இது சிவகார்த்திகேயனுக்கு முக்கியமான படமாக இருக்கும். அதே போல்  இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு  விவசாயியாக நடிக்கிறார் ரகுல் பிரீத் சிங் வேலை பார்க்கும் பெண்ணாக வருகிறார்.  நகைச்சுவை வேடங்களில் கருணாகரன், மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிப்பதாக கூறியுள்ளார் இயக்குனர்.


 

click me!