விஜய் - அட்லீயால் விஜய் சேதுபதிக்கு வந்த சோதனை!

By manimegalai aFirst Published Feb 1, 2019, 4:09 PM IST
Highlights

விஜய் படத்தால், தற்போது விஜய் சேதுபதி திரைப்படம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 

விஜய் படத்தால், தற்போது விஜய் சேதுபதி திரைப்படம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் 'சர்கார்' படத்தை தொடர்ந்து, இயக்குனர் அட்லீ இயக்கத்தில் மீண்டும், 63 வது படத்தை நடிக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க கால் பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளது. கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  

இந்நிலையில் இதே போல், கால் பந்து விளையாட்டை மையமாக வைத்து, அறிமுக இயக்குனர் பிரபு இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடிக்க இருந்தார்.  தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு  நிறுத்தி வைக்க பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்க்கு முக்கிய காரணம், விஜய் படத்தின் கருவை போலவே இந்த படமும் கால் பந்து விளையாட்டை, மையப்படுத்தி எடுக்க இயக்குனர் பிரபு திட்டமிட்டுள்ளது தான்,  அட்லீ - விஜய்  படத்தின் அறிவிப்பு வருவதற்கு முன்பே இந்த படம் உறுதி செய்தியப்பட்டிருந்தாலும், விஜய் 63  படம் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு முன்பே ஆரம்பமாகி விட்டது .

தற்போது இந்த படத்தை இயக்கினால் விஜய்யின் பட கதையும், இந்த கதையும் ஒன்று என்கிற தகவல் பரவி இரண்டு படத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கோடம்பத்தில் பரவலாக பேசப்படுகிறது. 

இதில் இருந்து தமிழ் சினிமாவில், கால் பந்து விளையாட்டை மையப்படுத்தி தொடர்ந்து படங்கள் வர வாய்ப்புள்ளது. மேலும்  இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்து குறித்து எந்த அதிகார பூர்வ தகவலும் வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

click me!