
‘சர்கார்’விவாகாரத்தில் தற்போது அ.தி.மு.க. அரசைவிடவும் அதிக விமர்சனத்துக்கு ஆளாகிவருவது சென்ஸார் போர்டுதான். இப்படி அதிகார வர்க்கத்துக்கு பயந்து அவர்கள் இஷ்டத்துக்கு ஆடுவதற்குப் பதில் பேசாமல் சென்ஸார் போர்டையே கலைத்துவிடலாமே என்று சிறப்பான ஆலோசனை ஒன்றை வழங்கியிருக்கிறார் நடிகை குஷ்பு.
சர்காரின் ஒருவிரல் புரட்சிக்கு எதிராக ஆளும் கட்சியினர் ஆளாளுக்கு பல விரல்களை தூக்கிய நிலையில் நேற்று மறு சென்ஸார் முடிந்து படம் திரையிடப்பட்டது. இப்படி ஒரு முறையற்ற சென்ஸார் தேவையா என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. யாரையுமே விமர்சிக்காமல் படம் எடுப்பதென்றால் முன்பு தூர்தர்ஷனில் ஒளிபரப்பான வயலும் வாழ்வு மாதிரிதான் எடுக்கமுடியும் திரைத்துறையினர் புலம்பி வருகின்றனர்.
இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பொங்கிய நடிகை குஷ்பு, ‘சர்கார்’ படத்தை அமைச்சர்கள் விருப்பப்படி மறுதணிக்கை செய்ததன் மூலம் குண்டர் கலாச்சாரம் மேலும் பரவ வழி செய்யப்பட்டுள்ளது. எந்த வசனங்கள் படத்தில் இடம்பெறலாம், எந்த காட்சிகளை வெட்டலாம் என்பதை அரசியல் கட்சிகள், ஜாதி வெறியர்கள், கலாச்சாரக் காவலர்கல் என்று கூறிக்கொள்பவர்கள்தான் முடிவு செய்வார்களெனில் பேசாமல் சென்ஸார் போர்டை கலைத்துவிட்டு மேற்படி சக்திகளையே நியமித்துவிடலாம்’ என்று காட்டமாகக் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.