கண்டு கொள்ளாத விஜய்! மயங்கி விழுந்த விநியோகஸ்தர்! சர்கார் சமரசத்தின் உண்மை பின்னணி!

By sathish kFirst Published Nov 10, 2018, 8:40 AM IST
Highlights

கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த அ.தி.மு.கவுடன் சர்கார் திரைப்பட குழு சமரசமாக சென்றதன் பின்னணியில் விநியோகஸ்தர் ஒருவர் விடுத்த தற்கொலை மிரட்டல் இருப்பது தெரியவந்துள்ளது.

தீபாவளிக்கு சர்கார் வெளியானாலும் கூட அந்த படத்திற்கு மறு நாள் தான் அ.தி.மு.க தரப்பில் இருந்து மிரட்டல்கள் வர ஆரம்பித்தது. அதிலும் வியாழக்கிழமை மாலையில் சட்டத்துறை அமைச்ச சி.வி.சண்முகம் சர்கார் படத்திற்கு எதிராகவும், நடிகர் விஜய்க்கு எதிராகவும் பேசிய பேச்சுகள் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு வியாழக்கிழமைஅன்று மதுரையில் முதன் முதலாக சர்காருக்கு எதிராக அ.தி.மு.கவினர் போராட்டத்தை நடத்தினர்.

அதன் பிறகு சர்கார் எதிர்ப்பு அனைத்து திரையரங்குகள் முன்பும் கொளுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. மதுரை, தஞ்சை, திருவண்ணாமலை, கோவை உள்ளிட்ட நகரங்களில் சர்கார் படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் வெள்ளியன்று காலை காட்சியையும் திரையிட முடியாது என்று திரையரங்க உரிமையாளர்கள் விநியோக உரிமையை பெற்றுள்ள தேனாண்டாள் பிலிம்சிடம் தெரிவித்துவிட்டனர். பிரச்சனை பெரிதாகாது என்று கருதிக் கொண்டிருந்த தேனாண்டாள் பிலிம்சுக்கு படத்தை திரையிட முடியாது என்று திரையரங்க உரிமையாளர்கள் கூறிய பிறகு தான் பிரச்சனையின் தீவிரம் புரிந்தது.

மேலும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கவில்லை என்றால் சர்காரை தூக்கிவிட்டு வேறு படங்களை போடுவதை தவிர வேறு வழியில்லை என்றும் திரையரங்க உரிமையாளர்கள் தேனாண்டாள் பிலிம்ஸ் ஹேமா ருக்மனியிடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். இதனால் பயந்து போனா ஹேமா,   உடனடியாக படத்தின் ஹீரோவான விஜயை கொண்டுள்ளார். பிரச்சனையை தீர்க்க சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குமாறு திரையரங்க உரிமையாளர்கள் வலியுறுத்துவதாக விஜயிடம் ஹேமா கூறியுள்ளார்.

தணிக்கைக்கு சென்று வந்த பிறகு எப்படி காட்சிகளை நீக்க முடியும்? மேலும் அரசியல் படம் எடுத்துவிட்டு அரசியல் நிர்பந்தந்திற்கு அடிபணிவது சரியாக இருக்காது என்றும் விஜய் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனை கேட்டு ஒரு கட்டத்தில் ஹேமா ருக்மணி மயங்கி விழும் நிலைக்கு சென்றுள்ளார். ஏனென்றால் ஏற்கனவே விஜயை வைத்து மெர்சல் படம் எடுத்து கையை சுட்டுக் கொண்டவர்கள் இவர்கள். படம் வெற்றிகரமாக ஓடிய போதும் செலவை சரியாக திட்டமிடாதது மற்றும் வியாபாரத்தில் கோட்டை விட்டதால் சுமார் 10 கோடி ரூபாய் வரை தேனாண்டாள் பிலிம்ஸ் இழப்பை சந்தித்தது. இதனால் விஜயின் சர்கார் படத்தை தயாரித்து நஷ்டத்தை ஈடுகட்ட தேனாண்டாள் பிலிம்ஸ் முயன்றது.

ஆனால் தேனாண்டாள் பிலிம்சுக்கு மேலும் ஒரு படம் பண்ண விருப்பம் இல்லாத விஜய் சன் பிக்சர்சுடன் இணைந்தார். பின்னர் நடைபெற்ற பஞ்சாயத்துகளுக்கு பிறகு சர்கார் படத்தின் விநியோக உரிமை மட்டும் தேனாண்டாள் பிலிம்சுக்கு கொடுக்கப்பட்டது. இந்த விநியோக உரிமையின் மூலம் தான் மெர்சலில் இழந்த பணத்தை பெறும் முயற்சியில் தேனாண்டாள் பிலிம்ஸ் இருந்தது.

இந்த நிலையில் அ.தி.மு.கவினர் மூலமாக சர்காருக்கு பிரச்சனை ஏற்பட்டு திரையரங்குகள் படத்தை நிறுத்தியதால் தேனாண்டாள் பிலிம்ஸ் நிர்வாகிகள் செய்வதறியாது திகைத்தனர். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி படத்தை தொடர்ந்து திரையிட அனுமதிக்கவில்லை என்றால் நடு ரோட்டுக்கு வருவதை தவிர வேறு வழியில்லை என்றும் புலம்பியுள்ளனர். தொடர்பு கொண்ட தேனாண்டாள் பிலிம்ஸ் தரப்பு தயவு செய்து சர்ச்சை காட்சிகளை நீக்க ஒப்புக் கொள்ளுமாறு சன் பிக்சர்சை கேட்டுக் கொண்டனர். ஆனால் அப்படி எல்லாம் அ.தி.மு.க மிரட்டலுக்கு பணிய முடியாது என்ற சன் பிக்சர்சும் கையை விரித்துள்ளது.

இதன் பிறகு தான் தேனாண்டாள் பிலிம்சுக்கு ஆதரவாக திரையரங்க உரிமையாளர் சங்கம் களம் இறங்கியது. தீபாவளிக்கு ஒரே ஒரு படம் தான் வெளியாகியுள்ளது. அடுத்து வேறு நல்ல படம் அடுத்தடுத்த வாரங்களில் தான் வெளியாக உள்ளது. சர்கார் ஓடவில்லை என்றால் திரையரங்குகளில் எந்த படத்தை போடுவது என்று அவர்களும் டென்சன் ஆகியுள்ளனர். இதன் பிறகு சர்காரில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் தரப்பும் சன் பிக்சர்சை நெருக்கியுள்ளது.

வழக்கம் போல் சன் பிக்சர்சும் – விஜயும் தங்கள் நிலையில் உறுதியாக இருக்க காட்சிகளை நீக்கவில்லை என்றால் இனி விஜய் படங்களையும், சன் பிக்சர்ஸ் படங்களையும் திரையிடப்போவதில்லை என்று தீர்மானம் நிறைவேற்ற நேரிடும் என்று ஒரு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பதறிப்போய் தான் விஜயும் – சன் பிக்சர்சும் காட்சிகளை நீக்க ஒப்புக் கொண்டுள்ளனர்.

click me!