
தனது வீட்டுக்கு அருகே நம்பர் பிளேட் கூட இல்லாமல் பத்து நாட்களாக நின்று கொண்டிருக்கும் அனாதை கண்டெய்னர் லாரி ஒன்று குறித்து நடிகை குஷ்பு ட்விட்டரில் பதிவிட்டிருப்பது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
நடிகை குஷ்புவின் வீடு சென்னை சாந்தோம் பகுதியில் இருக்கிறது.குஷ்பு வீட்டு அருகே ஒரு கண்டெய்னர் லாரி 10 நாட்களாக நிற்கிறது. அதில், நம்பர் பிளேட்கூட இல்லை.அந்த லாரியை நடிகை குஷ்பு படம் பிடித்து தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், எனது வீட்டுக்கு செல்லும் தெரு முனையில் நம்பர் பிளேட் இல்லாத கண்டெய்னர் லாரி 10 நாட்களாக நின்று கொண்டு இருக்கிறது.ஆனால், பொது மக்கள் யாரும் அதை கண்டுகொள்ளவில்லை. அதை பரிசோதிக்க வேண்டும். அல்லது புகார் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கூட யாருக்கும் இல்லை.நம்பர் பிளேட் இல்லாமல் இருப்பதால் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. சென்னை போலீசார் இதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்று கூறி இருந்தார்.
இதற்கு டுவிட்டரில் பதில் கருத்து தெரிவித்த பலரும் நீங்கள் ஏன் போலீசில் புகார் செய்யக்கூடாது என்று கேட்டு இருந்தனர். சிலர் கேலி செய்தும் கருத்து வெளியிட்டு இருந்தனர்.அதற்கு குஷ்பு பதில் அளித்து வெளியிட்ட பதிவில், ...அந்த லாரி எனது தெருவில் நிற்கவில்லை. அப்படி இருந்தால் நான் புகார் செய்து இருப்பேன். யாராவது உதவ முடிந்தால் செய்யுங்கள். கேலி செய்ய வேண்டாம். வாய் மூடி நடையை கட்டுங்கள் என்று கூறி இருந்தார்.இது சம்பந்தமாக டுவிட்டரில் தொடர்ந்து வாக்குவாதங்கள் நடந்தன. இப்போது போலீஸ் கவனத்துக்கு இந்த விஷயம் வந்துள்ளது. ஆனாலும் இதுதொடர்பாக குஷ்புவுக்கும் அவரது ஃபாலோயர்களுக்கும் நடுவில் செல்லச்சண்டை தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.