“அதிகப்பிரசங்கி தனம் வேண்டாம் தம்பி”... கணவருக்கு சப்போர்ட்டாக கமல் ரசிகரை வெளுத்து வாங்கிய குஷ்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 16, 2020, 6:26 PM IST
Highlights

இந்த படத்தில் கமல் ஹாசனின் அசத்திய நடிப்பு மிகுந்த பாராட்டுக்களை பெற்றது. அதேபோல் கதையும் தமிழ் சினிமாவின் முக்கியமான மைல்கல் எனும் அளவிற்கு நல்ல விமர்சனங்களை பெற்றது

இந்தியாவில் சினிமாவில் எந்த நடிகைக்கும் கிடைக்காத பெருமைக்கு சொந்தக்காரி குஷ்பு, அவருக்கு மட்டுமே தமிழக ரசிகர்கள் கோவில் கட்டினர். ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் குஷ்பு. 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி முன்னணி ஹீரோக்களும் குஷ்புவுடன் ஜோடி போட காத்திருந்தனர். அப்போது எப்படி சினிமாவில் பிசியாக இருந்தாரோ அதே போல் தான் இப்போதும், சினிமா, அரசியல், சின்னத்திரை என சகலகலா வள்ளியாக சுற்றிச் சுழல்கிறார்.

இதையும் படிங்க:  சின்னத்திரை நயன்தாரா வாணிபோஜன் போட்டோவில் இதை கவனித்தீர்களா?... தீயாய் பரவும் புகைப்படம்...!

தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டில் இருக்கும் குஷ்பு சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வருகிறார். ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கமெண்ட்களை படிக்கும் குஷ்பு, சரியானவற்றிற்கு பதிலளிக்கவும் செய்கிறார். இந்நிலையில் சுந்தர் சி இயக்கிய அன்பே சிவம் படம் குறித்த கருத்திற்கு குஷ்பு கொடுத்திருக்கும் பதில் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 2003ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் கமல் ஹாசன், மாதவன், கிரண் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் “அன்பே சிவம்”. 

இதையும் படிங்க: 

இந்த படத்தில் கமல் ஹாசனின் அசத்திய நடிப்பு மிகுந்த பாராட்டுக்களை பெற்றது. அதேபோல் கதையும் தமிழ் சினிமாவின் முக்கியமான மைல்கல் எனும் அளவிற்கு நல்ல விமர்சனங்களை பெற்றது. என்ன தான் ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் விமர்சன ரீதியாக படத்தை ஆகா...ஓஹோ... என புகழ்ந்து தள்ளினாலும், வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. இந்நிலையில் ஐஎம்டிபி தளத்தில் அதிக ரேட்டிங் கொண்ட படமாக அன்பே சிவம் இருப்பது குறித்து கமல் ரசிகர் ஒருவர் பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த குஷ்பு, படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருக்கலாம். அப்படி நடந்திருந்தால் என் கணவர் 2 வருடங்கள் வீட்டில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என பதிவிட்டிருந்தார். 

Wish film had done commercially well.. my husband wouldn’t sit at home for 2 yrs after that.. 😊😊😊❤️❤️ https://t.co/yaCFzlTXbu

— KhushbuSundar ❤️ (@khushsundar)

இதையும் படிங்க: 

மற்றொரு ரசிகரின் கேள்விக்கு பதிலளித்துள்ள குஷ்பு, வின்னர் 2001ம் ஆண்டு தாமதமாக வெளியானது. அன்பே சிவம் தோல்வியால் கிரி படத்தை சொந்தமாக தயாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அன்பே சிவம் 2003ம் ஆண்டும், கிரி 2004ம் ஆண்டும் வெளியானது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள், அதனால் ரொம்ப அதிகப்பிரசங்கி தனம் பண்ண வேண்டாம் தம்பி. அறிவாளின்னு நினைச்சிட்டு முட்டாளா திரியுறீங்க என சகட்டுமேனிக்கு வெளுத்து வாங்கியுள்ளார். குஷ்புவின் இந்த அதிரடி பதிலால் அந்த ரசிகர் ட்விட்டையே டெலிட் செய்துவிட்டார் என்பது கூடுதல் தகவல். 

Winner was shot in 2001 n released late. Giri was r own production, forced to start after the debacle of Anbe Sivam..Giri released in Oct 2004 n Anbe sivam in Jan 2003. Almost 2yrs. So romba adhiga prasangithanam panna vendaam thambi.. arivaali nenanchittu muttaala theriyuringe. https://t.co/aqSgY09Dxs

— KhushbuSundar ❤️ (@khushsundar)
click me!