உங்க அம்மா என்ன ஃபிலிப்கார்ட்டா?... இன்ஸ்டா பதிவிற்கு ஏடாகூடமாக கமெண்ட் போட்ட ரசிகர்... கடுப்பான குஷ்பூவின் அதிரடி பதிலடி...!

Published : Dec 05, 2019, 06:07 PM IST
உங்க அம்மா என்ன ஃபிலிப்கார்ட்டா?... இன்ஸ்டா பதிவிற்கு ஏடாகூடமாக கமெண்ட் போட்ட ரசிகர்... கடுப்பான குஷ்பூவின் அதிரடி பதிலடி...!

சுருக்கம்

அதைப் பார்த்த நெட்டிசன் ஒருவர் அனகோண்டாவும், அமேசானும் என கமெண்ட் செய்திருந்தார். நடிகை ஸ்ரீரெட்டி விஷாலை அனகோண்டா என சாடியிருந்ததை குறிக்கும் விதமாக அப்படி கமெண்ட் செய்துள்ளார் போல. அதைப் பார்த்து கடுப்பான குஷ்பூ, உங்க அம்மா என்ன  FLIPKART-ஆ என பதிலடி கொடுத்துள்ளார். 

தமிழ் ரசிகர்கள் கோவில் கட்டும் அளவிற்கு கொடி கட்டி பறந்தவர் குஷ்பூ. சூப்பர் ஸ்டார், உலக நாயகன் என குஷ்பூ உடன் ஜோடி போட்டு நடிக்காத முன்னணி நாயகர்கள் இல்லை என்று சொல்லலாம். தற்போதும் சினிமாவில் நடித்து வரும் குஷ்பூ, அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டீவாக இருந்த குஷ்பூ, ரசிகர்களின் தரம் தாழ்ந்த கமெண்ட்ஸ்களால், டுவிட்டர் கணக்கையே நீக்கிவிட்டார். தற்போது சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் மகாலட்சுமி சீரியலில் பிசியாக நடித்து வரும் குஷ்பூ, இன்ஸ்டாகிராமில் மட்டும் தனது புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். 

சமீபத்தில் விஷால் உடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார் குஷ்பூ. அதற்கு பார்ட்னர்ஸ் இன் கிரைம் என டேக் செய்திருந்தார். அதைப் பார்த்த நெட்டிசன் ஒருவர் அனகோண்டாவும், அமேசானும் என கமெண்ட் செய்திருந்தார். நடிகை ஸ்ரீரெட்டி விஷாலை அனகோண்டா என சாடியிருந்ததை குறிக்கும் விதமாக அப்படி கமெண்ட் செய்துள்ளார் போல. அதைப் பார்த்து கடுப்பான குஷ்பூ, உங்க அம்மா என்ன  FLIPKART-ஆ என பதிலடி கொடுத்துள்ளார். 

அந்த அதிரடி பதிலடியைப் பார்த்த அவரது ரசிகர்கள் குஷ்பூவை வெகுவாக பாராட்டியுள்ளனர். இருப்பினும் ஒருசில நெட்டிசன்கள் கேவலமா கமெண்ட் போட்டவனை மட்டும் திட்டாமல் ஏன் அவன் அம்மாவை எல்லாம் பேசுறீங்க, அப்படி பேசாதீங்க மேடம் என அட்வைஸ் செய்துள்ளனர். பிரபலங்களின் பதிவிற்கு ரசிகர்கள் நல்லபடியாக மட்டுமே கமெண்ட்ஸ் போட வேண்டும் என்பது இல்லை, ஆனால் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இப்படி தாறுமாறாக கமெண்ட்ஸ் போட்டால் இப்படித் தான் வாங்கி கட்டிக்கணும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Ethirneechal Today Episode : ஆதி குணசேகரனுக்கு என்னாச்சு? கதறி அழுத கதிர்; கல்லுமாதிரி நின்ற ஜனனி
கருப்பு ஆடியோ லாஞ்ச் ஹைலைட்ஸ்... சூர்யா முதல் RJB வரை பிரபலங்கள் பேசியதென்ன?