Kushboo: குஷ்பு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
90களின் கனவு கன்னியாக இருந்த குஷ்புவிற்கு தமிழக ரசிகர்கள் சேர்ந்து கோவில் கட்டினர். இவர் வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் கொடிகட்டி பறந்தவர்.
குஷ்பு -சுந்தர் C திருமணம்:
கடந்த 2000 ஆம் ஆண்டு இவர் பிரபல இயக்குனர் சுந்தர் சி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த 22 ஆண்டுகளாக இருவரும் நட்சத்திர கப்புலாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இருவரும் இணைந்து படங்களையும் தயாரித்து வருகின்றனர்.
அரசியல் பயணம்:
இப்போது படங்கள் நடிப்பதை தாண்டி அரசியலில் முழு ஈடுபாடு காட்டி வருகிறார். அரசியலிலும் திமுக, காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து தற்போது பாஜகவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். விரைவில் குஷ்புவிற்கு பாஜக தலைமை மிக முக்கிய பொறுப்பை கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சினிமா வாழ்கை:
நடிகை குஷ்பு கடைசியாக ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தார். சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் குஷ்பு, கணவர் சுந்தர் சி, மகள்கள் அவந்திகா, அனந்திதா பற்றிய அப்டேடுகளையும் குடும்ப புகைப்படங்களையும் அவ்வப்போது பதிவிட்டு வருகிறார்.
குஷ்பு மருத்துவமனையில் அனுமதி:
On the road to recovery.. 💕💕 pic.twitter.com/wsWDFH7aku
— KhushbuSundar (@khushsundar)இந்நிலையில், குஷ்பு அண்மையில் அரசியல் காரணங்களுக்காக டெல்லி பயணம் சென்றுள்ளார். அதை முடித்துவிட்டு வீடு திரும்பும் சமயத்தில் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.