கொரோனா ஓய்வு... திரைப்பட பணிகள் இல்லை: பாவாடையை மடிச்சு கட்டிக்கொண்டு நாற்று நட்ட இளம் நடிகை!

Published : May 05, 2020, 06:58 PM IST
கொரோனா ஓய்வு... திரைப்பட பணிகள் இல்லை: பாவாடையை மடிச்சு கட்டிக்கொண்டு நாற்று நட்ட இளம்  நடிகை!

சுருக்கம்

கொரோனா தொற்று காரணமாக போடப்பட்ட ஊரடங்கு ஓய்வு, பிரபலங்கள் பலரையும் அவர்கள் விரும்பிய வேலைகளை செய்ய வைத்துள்ளது.  

கொரோனா தொற்று காரணமாக போடப்பட்ட ஊரடங்கு ஓய்வு, பிரபலங்கள் பலரையும் அவர்கள் விரும்பிய வேலைகளை செய்ய வைத்துள்ளது.

ஏற்கனவே பாலிவுட் பிரபலங்கள், வீட்டில் வேலை செய்பவர்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு, தங்களுடைய வீட்டு வேலைகளை அவர்களே செய்ய துவங்கினர். மேலும் இதுகுறித்த புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் எடுத்து வெளியிட்டு ரசிகர்களிடம் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

இன்னும் சில நடிகைகள் தினம் தினம், காலையில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ மற்றும் விதவிதமாக சமைக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களையும் செய்து பார்க்குமாறு அறிவுறுத்தி வருகிறார்கள்.

நடிகை கீர்த்தி பாண்டியன்:

இந்நிலையில் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான அருண்பாண்டியனின்  மகள், அவருடைய சொந்த ஊரில் உள்ள, சொந்த விவசாய நிலத்தில் ட்ராக்ட்டர் மூலம் ஏர் உழுத வீடியோவை ஒன்றை ஏற்கனவே வெளியிட்டு, மக்களை கவர்ந்த நிலையில்... தற்போது விவசாய நிலத்தில், தன்னுடைய தங்கையோடு இறங்கி நாற்று நட்டுள்ளார். 

இவர், கடந்த ஆண்டு வெளியான ‘தும்பா’என்ற படத்தில் நாயகியாக நடித்தவர்.  இந்த படத்தை தொடர்ந்து அவருடைய அப்பா அருண் பாண்டியனுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் அருண் பாண்டியன் மகளாகவே இவர் நடிக்க உள்ளார். இப்படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'ஹெலன்' படத்தின், ரீமேக்காக எடுக்கப்பட உள்ளது.

விவசாய வேலை செய்ய கீர்த்தி பாண்டியன் வயலில் இறங்கி, நாற்று நடும் பெண்களுடன் இணைந்து நாற்று நடும் இந்த வீடியோவுக்கு சமூக வலைத்தளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் இது போன்ற வேலைகளை கற்று கொள்ள இதுவே சரியான தருணம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் இது தனது தந்தைக்கு சொந்தமான நிலத்தில் தான் நாற்று நடுவதாகவும், இது பொது இடம் கிடையாது என்றும், அதனால் தான் ஊரடங்கை மீறவில்லை என்றும் கீர்த்தி பாண்டியன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?