
நடிகை கஸ்தூரிக்கு தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஆசையாக இருக்கிறதாம்.
சமூக வலதைளங்கள் பக்கம் போனாலே பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி தான் பேச்சு. சிலர் பப்ளிசிட்டிக்காக பிக் பாஸ் நிகழ்ச்சியை திட்டினாலும், பெரும்பாலானோர் பிக் பாஸ் நிகழ்ச்சியை பொழுது போக்கு நிகழ்ச்சியாக அன்றி வேறு பார்வையில் பார்க்கவில்லை.
அவர்களுக்கு சரவணன் மீனாட்சியும், சூப்பர் சிங்கரும், பிக் பாஸும் ஒன்றுதான்.
இந்த நிலையில், நடிகை கஸ்தூரியை தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு விஜய் டிவி பலமுறை அழைத்தும் குழந்தைகளை விட்டுவிட்டு 100 நாட்கள் இருக்க வேண்டும் என்பதால் முடியாது” என்று மறுத்துவிட்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாவிட்டாலும் கஸ்தூரி அது குறித்து டிவிட்டரில் அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் அவருக்கு தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஆசை வந்துள்ளது.
ஜூனியர் என்.டி.ஆர். நடத்தும் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அசை வந்துள்ளது என்று தந்து டிவிட்டரில் கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
அவர், “தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி முழுக்க முழுக்க பொழுதுபோக்கை மட்டும் வைத்தே நடத்தப்படுகிறது. நெகட்டிவ் எதுவும் இல்லை. ஜீனியர் என்.டி.ஆர் நன்றாக தொகுத்து வழங்குகிறார். எனக்கும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.