தயவுசெஞ்சி உதவுங்க... தவெக தலைவர் விஜய்க்கு நடிகை கஸ்தூரி வைத்த கோரிக்கை!

Published : Oct 19, 2025, 11:27 AM IST
Actress Kasthuri requests Vijay to help retired police officer Varadharajan

சுருக்கம்

Actress Kasthuri request: நடிகை கஸ்தூரி, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தவெக தலைவர் விஜய்க்கு உதவி செய்யும்படி உருக்கமாக கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

விஜய்க்கு கூடும் வரவேற்பு:

தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பு மூலம், மக்கள் மனதில் இடம்பிடித்த பல பிரபலங்கள் அரசியலில் கால்பதித்துள்ளனர். இதில் வெற்றி பெற்றவர்களை விட தோல்வியை தழுவியவர்களே அதிகம். ஆனால் தற்போது அரசியலில் கால் பதித்து முதல்வரின் இருக்கையை பிடித்தே ஆகவேண்டும் என்கிற முனைப்போடு களமாட துடங்கி இருக்கிறார் விஜய். இவரின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் விதமாகவே விஜய்க்கு வரவேற்பும் கூடியது.

கரூர் துயர சம்பவம்:

விழுப்புரம், மதுரை, போன்ற இடங்களில், இவர் நடத்திய மாநாட்டிலும் கூட்டம் அலைமோதியது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி விஜய் மேற்கொண்ட தேர்தல் பரப்புரையின் போது, எக்கச்சக்க கூட்டம் கூடியதால் கூட்ட நெரிசல் சிக்கி 10 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவத்திற்கு விஜய் குறித்த நேரத்தில் மக்களை சந்திக்காமல், கூட்டத்திற்கு தாமதமாக வந்ததே காரணம் என கூறப்பட்டது.

யார் மீது தவறு?

பாஜக, மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக மாநில அரசின் அஜாகரத்தை தான் இந்த அசம்பாவிதத்துக்கு காரணம் என கூறியது. இதை தொடர்ந்து உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ கரூர் கூட்ட நெரிசல் வழக்கை விசாரித்து வருகிறது. இதற்கிடையே, கரூர் சம்பவம் தொடர்பான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன் தவெக தலைவர் விஜய் குறித்து விமர்சனங்களை முன்வைத்தார்.

நீதிபதி மீது எழுந்த விமர்சனம்:

எனவே நீதிபதிக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பலர் பல்வேறு அவதூறு கருத்துக்களை பரப்ப துவங்கினர். அவதூறு கருத்து பதிவிட்ட நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை கைது செய்ததும் குறிப்பிடத்தக்கது.

ஓய்வு பெற்ற காவலர் வரதராஜன் கைது:

மேலும் கரூர் சம்பவம் தொடர்பாக, தவெக தலைவர் விஜய்யை விமர்சித்ததற்கு, எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக... உயர் நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக பதிவு போட்ட ஓய்வு பெற்ற காவலர் வரதராஜனை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் இவருக்கு ஜாமீன் கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் வரதராஜன் தரப்பில் 'அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வயது மூப்பு காரணமாக பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளை எதிர்கொள்வதால், ஜாமீன் வழங்க வேண்டும்' என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கை விசாரித்த நீதிமதி கார்த்திகேயன், ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

நடிகை கஸ்தூரியின் பதிவு:

தற்போது வரதராஜனுக்கு ஆதரவாக, பிரபல நடிகை கஸ்தூரி... தவெக தலைவர் விஜய்க்கு கோரிக்கை வைக்கும் நோக்கத்தில் ட்விட்டர் தலத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். இந்த பதிவில், "திரு விஜய் இந்த நல்ல மனிதருக்கு உதவ வேண்டும். நேர்மையான Ex cop வரதராஜன் அவர்கள், 75 வயதில் சிறையில் தீபாவளியை கழிக்க போகிறார். அவருக்கு தயவு செய்து உதவுங்கள் என பதிவிட்டுள்ளார். நடிகை கஸ்தூரியின் இந்த கோரிக்கைக்கு பதில் தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

மாட்டிக்கிட்டோம் என்று தெரிந்து நாடகமாடிய தங்கமயில்- பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: அப்பாவை கட்டிப்பிடித்து கதறி அழுத சரவணன் : கூலா வேடிக்கை பார்த்த மயில்!