
கடந்த 4 நாட்களுக்கு முன்பு மும்பையில் ஏ.ஆர்.ரகுமானின் இசைக்கச்சேரி நடைபெற்றது. அயர்லாந்தைச் சேர்ந்த U2 என்ற பாப் இசை குழுவுடன் சேர்ந்து இசைப்புயல் கச்சேரி நடத்தினர். அதனைக் காண பாலிவுட் பிரபலங்கள் முதல் இசைப்புயலின் ரசிகர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் கூடினர். படீல் ஸ்டேடியமில் நடைபெற்ற அந்த இசைக்கச்சேரியில் பிரபல நடிகை காஜல் அகர்வால், தனது ஆண் நண்பருடன் செய்த காரியம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால், அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கோமாளி திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது உலக நாயகன் கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் பின்னர் கைவசம் படங்கள் ஏதும் இல்லாததால், நடிச்ச வரைக்கும் போது கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகலாம் என்ற மூடிற்கு வந்துவிட்டார் காஜல்.
எனவே காஜல் அகர்வாலுக்கு அவரது பெற்றோர் தீவிரமாக மாப்பிள்ளை தேடி வரும் நிலையில், ஆண் நண்பர் ஒருவருடன் காஜல் அகர்வால் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைராலகியுள்ளது. தங்கை மற்றும் ஆண் நண்பருடன் ஏ.ஆர்.ரகுமான் இசைக்கச்சேரியைக் காண சென்றுள்ளார் காஜல அகர்வால்.
அந்நிகழ்ச்சியை நன்றாக பார்ப்பதற்காக காஜல் அகர்வால், அந்த ஆண் நண்பரின் தோள் மீது ஏறி ஒய்யாரமாக அமர்ந்துள்ளார். காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த ஆண் நண்பர் யார் என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.