விஜய், அஜித் சம்பளம் எவ்வளவு தெரியுமா?.... அந்த விஷயத்தில் சறுக்கிய தளபதி... தட்டித்தூக்கிய தல...!

By Kanimozhi PannerselvamFirst Published Dec 19, 2019, 7:05 PM IST
Highlights

கடந்த ஆண்டு 26வது இடத்தில் இருந்த விஜய் ஒரே அடியாக 21 இடங்கள் பின் தங்கி, இந்த முறை 47வது இடத்தில் உள்ளார். விஜய்யின் ஆண்டு வருமானம் 30 கோடி ஆகும். கடந்த ஆண்டு பட்டியலிலேயே இல்லாத அஜித், இந்த ஆண்டு 52வது இடத்தை பிடித்துள்ளார். 

2019ம் ஆண்டிற்கான இந்திய அளவில் பிரபலங்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 100 பிரபலங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. பிரபலங்களின் ஆண்டு வருமானம், ஊடகங்கள் மற்றும் சோசியல் மீடியாவில் அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கு ஆகியவற்றை வைத்து கணக்கிடப்படுகிறது. 

இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், இரண்டாவது இடத்தில் பாலிவுட் ஸ்டார் அக்‌ஷய்குமாரும், 3வது இடத்தில் சல்மான்கானும் உள்ளனர். அமிதாப் பச்சன், ஷாரூக்கான், தோனி ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். 

இந்நிலையில், இந்திய அளவில் 13வது இடத்தில் இருக்கும் ரஜினிகாந்த் 100 கோடி வருமானத்தோடு தென்னிந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு 26வது இடத்தில் இருந்த விஜய் ஒரே அடியாக 21 இடங்கள் பின் தங்கி, இந்த முறை 47வது இடத்தில் உள்ளார். விஜய்யின் ஆண்டு வருமானம் 30 கோடி ஆகும். கடந்த ஆண்டு பட்டியலிலேயே இல்லாத அஜித், இந்த ஆண்டு 52வது இடத்தை பிடித்துள்ளார். 

என்ன விஜய்க்கு பின்னாடி தானே தல வர்றாருன்னு நினைக்கிறீங்களா?. அதுதான் இல்ல லிஸ்ட்ல லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக நின்றது என்னமோ தல தான். காரணம் இந்த ஆண்டு அஜித்தின் வருமானம் 40.5 கோடி. இந்த தகவல் அஜித் ரசிகர்களை சற்றே நிம்மதி பெருமூச்சுவிட வைத்திருக்கிறது. 
 

click me!