
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் "தர்பார்" படத்தில் நடித்து முடித்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அடுத்தது சிறுத்தை சிவா இயக்கத்தில் "தலைவர் 168" படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. சன்பிக்சர்ஸ் தயாரிக்க உள்ள அந்த படத்தில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இப்படத்திற்கான பூஜை கடந்த 11ம் தேதி நடைபெற்றது. அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி செம்ம வைரலானது.
இந்நிலையில், இன்று "தலைவர் 168" படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோவில் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பை வெளியிட்டது, வேறு யாரும் இல்லை. "தலைவர் 168" படத்தின் இசையமைப்பாளர் டி.இமான். இன்று காலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த இமான், அதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், எளிமையின் உருவமான ரஜினிகாந்தை இன்று ஷூட்டிங் தளத்தில் சந்தித்தேன். இன்று பாடலுடன் ஷூட்டிங் தொடங்கிய உள்ளது. இந்த சமயத்தில் அவர் எனது பாடலை பாராட்டி பேசியது, எனக்கு புது உத்வேகத்தை கொடுத்துள்ளது. என்ன ஒரு ஒளி, அவரைச் சுற்றிலும் எனர்ஜி நிறைந்துள்ளது என பதிவிட்டுள்ளார். இந்த தகவல் சூப்பர் ஸ்டார் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.