குருநாதா உங்க அடுத்த அவதாரம் எப்போ?... வைகை புயலின் அதிரடியை காண காத்திருக்கும் ரசிகர்கள்... இந்தா வந்தாச்சு இல்ல...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Dec 19, 2019, 05:58 PM IST
குருநாதா உங்க அடுத்த அவதாரம் எப்போ?... வைகை புயலின் அதிரடியை காண காத்திருக்கும் ரசிகர்கள்... இந்தா வந்தாச்சு இல்ல...!

சுருக்கம்

பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என முன்னணி நடிகர், நடிகைகள் கூட கோடிகளில் சம்பளம் பெற்று நடித்து வருகின்றனர். தற்போது அந்த ஆசை நம் வைகை புயல் மனதிலும் எழுந்துள்ளதாம். 

டைமிங் காமெடி மட்டுமல்ல, தனது பாடி லாங்குவேஜிலும் மக்களை சிரிக்க வைப்பதில் ஜித்தன் நம்ம வைகை புயல் வடிவேலு. தற்போது மீம்ஸ் நாயகனாக சோசியல் மீடியாவை ஆட்சி செய்து வரும் வடிவேலு, நீண்ட காலமாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வருகிறார். சமீபத்தில் விஜய்யின் மெர்சல் படத்தில் கலக்கிய வடிவேலு, சினிமாவில் தோன்றவில்லை என்றாலும் நேசமணிக்கு என்னாச்சு என்ற ஒற்றை ஹேஷ்டேக்கால் உலக ட்ரெண்டிங் ஆனார். 

தற்போதைய இளம் தலைமுறையின் மாற்று களமாக உருவாகி வருவது வெப் சீரிஸ். அமேசான் ப்ரைம், ஹாட் ஸ்டார் பிரிமியம், நெட்ஃபிலிக்ஸ் என வரிசைக்கட்டி கொண்டு நிறுவனங்கள் ஆன்லைனில் வர்த்தகத்தில் குதித்துள்ளன. மார்க்கெட் போன நட்சத்திரங்கள் மட்டுமே சீரியலில் நடிப்பார்கள் என்பதை வெப் சீரிஸ் முற்றிலும் பொய்யாக்கியுள்ளது. 

பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என முன்னணி நடிகர், நடிகைகள் கூட கோடிகளில் சம்பளம் பெற்று நடித்து வருகின்றனர். தற்போது அந்த ஆசை நம் வைகை புயல் மனதிலும் எழுந்துள்ளதாம். சினிமாவில் மகிழ்விக்க வேண்டியதை வெப் சீரிஸ் மூலம் செய்யலாம் என திட்டமிட்டுள்ளாராம் வடிவேலு. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு புத்தாண்டில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மகிழ்ச்சியான செய்தி வடிவேலு ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தன்னுடைய திரையுலக கதாநாயகன் அஜித் குமாரை சந்தித்த நடிகர் சிம்பு!
பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!