
தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் மகாலட்சுமி. சின்னத்திரையிலும் கலக்கி வரும் இவர், தற்போது மலையாளத்தில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "சிவகாமி" சீரியலில் நடித்து வருகிறார். அந்த சீரியல் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர். மகாலட்சுமி தற்போது தனது நீண்ட நாள் காதலரை திருமணம் செய்து இல்லற வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.
நடிகை மகாலட்சுமி நீண்ட காலமாக நிர்மல் கிருஷ்ணா என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் இவர்களது நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற திருமணத்தில் ஏராளமான திரைப்பிரபலங்கள், சின்னத்திரை நடிகர், நடிகைகள் பங்கேற்று, இளம் ஜோடியை வாழ்த்தினர்.
கேரளா ஸ்டைலில் கழுத்து நிறைய நகை அணிந்து, திருமணமான மகிழ்ச்சியில் திழைக்கும் மகாலட்சுமியின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இளம் காதல் தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.