
’கேளடி கண்மணி’,’தமிழ்க்கடவுள் முருகன்’,’முள்ளும் மலரும்’ஆகிய தொலைக்காட்சி தொடர்களின் மூலம் பிரபலமானவரும் திரைப்படங்களில் குட்டி குட்டிப் பாத்திரங்களில் நடித்தவருமான நடிகை ஜெயலக்சுமி மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இன்று பா.ஜ.க.வில் இணைந்தார். இத்தகவலை பொன்ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
2008ம் ஆண்டு கரு.பழனியப்பன் இயக்கத்தில் சேரன் நடிப்பில் வெளிவந்த ‘பிரிவோம் சந்திப்போம்’படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமானவர் கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட பி.ஜெயலக்சுமி. அதன் பின்னர் ‘விசாரணை’,’குற்றம் 23’,’கோரிப்பாளையம்’,’முத்துக்கு முத்தாக’போன்ற பல படங்களில் நடித்தாலும் தொலைக்காட்சி தொடர்கள் மூலமாகவே அவர் பிரபலமானார். கல்யாணப் பரிசு, முள்ளும் மலரும், தமிழ்க்கடவுள் முருகன் போன்ற சீரியல்கள் மூலம் அவர் முன்னணி தொலைக்காட்சி நடிகையானார். ஏற்கனவே நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவுக்காக வலைதளங்களில் குரல் கொடுத்து வரும் நிலையில் விரைவில் இவரையும் எதிர்பார்க்கலாம்.
கடந்த சில தினங்களாகவே இவர் பாஜகவில் இணையப்போகிறார் என்ற செய்திகள் வெளிவந்துகொண்டிருந்த நிலையில் இன்று பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டார். இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில்,...திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகையும், வழக்கறிஞருமான ஜெயலக்ஷ்மி, இன்று தன்னை தமிழக பாஜகவில் இணைத்துக் கொண்டார். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி மற்றும் அவரது திட்டங்கள் மீதான ஈர்ப்பு தன்னை பாஜகவில் இணைத்துக் கொள்ள காரணம் என தெரிவித்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.