
திரையுலகத்தில் நடித்து வரும் அனைத்து நடிகைகளுக்கும், பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கும். அதிலும் ஓரம் கட்டப்பட்டு, மீண்டும் வலுவான கதாப்பாத்திரத்தில் நடிக்க துடிக்கும் நடிகைகள் என்றால் சொல்லவே வேண்டாம். சம்பளம் கூட வேண்டாம், வாய்ப்பு மட்டும் போதும் என நினைக்கிறார்கள்.
அந்த வகையில், 'வாகை சூடவா', 'சென்னையில் ஒரு நாள்' போன்ற பல படங்களில் நடித்தவர் நடிகை இனியா. சமீப காலமாக இவர் நடித்து வெளியான படங்கள் வெற்றி பெறாததால், பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். மலையாள மொழி படங்களில் படங்களில் நடித்தார்.
இந்நிலையில் 'ஓம் சினி வென்சர்ஸ் பட நிறுவனம்' சார்பில் சாரதி சதீஷ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா இயக்கத்தில், இனியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் 'காபி' , இந்த படத்தை பற்றி சாய் கிருஷ்ணா கூறுகையில்...
"ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த பெண், இளம் வயதில் தன்னுடைய பெற்றோரை இழந்து, பல்வேறு சவால்களுக்கு இடையே தன்னுடைய சகோதரரை படிக்க வைக்கிறார். கஷ்டங்கள் அனைத்தும் தீர்ந்து, நன்றாக வாழலாம் என நினைக்கும் நேரத்தில் எதிர்பார்த்த பல அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறுகிறது. அவை அனைத்தையும் நாயகி எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதை என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த படம் நம்மை அச்சுறுத்தி வரும் சமூக அவலத்தை தோலுரித்து காட்டும் என தெரிவித்துள்ளார் இயக்குனர் சாய் க்ரிஷ். இந்த படத்தின் மூலம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையில் நடிக்க வேண்டும் என்கிற இனியாவின் கனவு நிறைவேறி இருந்தாலும், படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்தே இவரின் அடுத்த பெண்கள் இருக்கும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.