தற்கொலைக்கு முயன்ற நடிகை இலியானா...! இவர் வாழ்வில் இப்படி ஒரு சோகமா!

 
Published : Nov 07, 2017, 05:58 PM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
தற்கொலைக்கு முயன்ற நடிகை இலியானா...! இவர் வாழ்வில் இப்படி ஒரு சோகமா!

சுருக்கம்

actress iliyaana try to sucide

கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் கொடுத்தவர் நடிகை இலியானா. இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'நண்பன்' படத்தில் நடித்தார். தொடர்ந்து அவர் பாலிவுட் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருவதால் மற்ற மொழிப் படங்களில் அதிகமாக கவனம் செலுத்தவில்லை.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட இவர், இவருடைய வாழ்வில் நடந்த மிக துயரமான சம்பவங்களை  பகிர்ந்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், ஒரு காலத்தில் நான் மிகவும் சோகமாகவேதான் இருப்பேன். ஆனால் எனக்கே தெரியாது... எனக்கு Body Dysmorphic Disorder (BDD) | Anxiety and Depression எனப்படும் மன நோய் உள்ளது என்று. (அதாவது இந்த மனச்சிதைவு ஏற்பட்டால் தன்னுடைய உடலில் ஏதோ குறைபாடு உள்ளது என்கிற எண்ணம் ஏற்பட்டுக்கொண்டே இருக்குமாம்.)

இதன் காரணமாக நான் பல முறை தற்கொலைக்கு முயன்றுள்ளேன். நான் இறந்தால் மட்டுமே என்னுடைய பிரச்சனை சரியாகும் என்று கூட எனக்கு பல முறை தோன்றியுள்ளது என்று தெரிவித்தார் இலியானா.

பின் தொடர்ந்து பேசிய இவர்... மன அழுத்தம் என்பது கனவு இல்லை, நிஜம். அது தானாக சரியாகிவிடும் என்று எண்ணாதீர்கள், நமக்கு ஏதோ நடக்கிறது அதற்குக் காரணம் என்ன என்று தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவாவது மருத்துவரிடம் சென்று தெரிந்து கொள்ளுங்கள். நான் அப்படிதான் செய்தேன் எனக் கூறினார்.

மேலும் நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே ஏற்றுக்கொள்வது தான் நல்லது. நடிகர் நடிகைகள் தங்களை அழகாகக் காண்பித்துக்கொள்ள 2 மணிநேரம் மேக் அப் போடுகின்றனர் என்பது தான் உண்மை.  ஆனால் மனதால் அனைவரும் மிகவும் அழகானவர்கள். ஆகவே உங்களைப் பற்றி நீங்கள் அதிகமாக கவலைப் படுபவராக இருந்தால் ஒரு வேளை அது மனச் சிதைவாகக் கூட மாறலாம் அதனை அலட்சியம் செய்யாதீர்கள் என ரசிகர்களுக்கு அன்பாக வேண்டுகோள் விடுத்தார் இலியானா.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அனல் பறக்கும் அரசியல் வரிகள்; ஜன நாயகன் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!