
சுமார் 27 வருடமாக வாடகை வீட்டில் வசித்து வந்த குணசேகரன், இன்னும் ஓரிரு மாதத்தில் தன் சொந்த உழைப்பில் கட்டிய வீட்டில் குடியேற இருந்த நிலையில், அந்த வீட்டில் ஒரு நாள் கூட வாழாமல் உயிரிழந்துள்ள சோகம் அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி அவருடன் பணியாற்றிய அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
எதிலும் வெளிப்படையான பேச்சு, சட்டென்ற கோவம், அனைவரையும் அரவணைக்கும் குணம், நேர்த்தியான நடிப்பு என்று, மிக குறுகிய காலத்தில் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர்கூட்டத்தை சேர்த்தவர் மாரிமுத்து. குறிப்பாக எதிர்நீச்சல் சீரியலில் அவருடைய கதாபாத்திரம் கெட்டவராக காண்பிக்கப்பட்டாலும், அனைவரும் அவரை புகழாத நாளில்லை.
இந்நிலையில் அவருடைய திடீர் மரணம், அனைவரையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது, குறிப்பாக அவருடன் அந்த சீரியலில் எப்போது சண்டைபோடும் நந்தினி என்கிற ஹரிப்ரியா, மாரிமுத்துவின் உடலை கண்டு கதறி அழுத காட்சிகள் காண்போரை கண்கலங்க செய்தது. இந்த சூழலில் அவர் இப்பொது ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படம் நேற்று ஷூட்டிங்கில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் "ஏன் எங்களை விட்டு சென்றீர்கள், அப்படி என்ன அவசரம் சார்.. உங்களை நந்தினி மிஸ் பண்ணுவா மாமா, உண்மையான கலைஞன் இறப்பதில்லை, எங்கள் இதயங்களில் எப்போதும் நீங்கள் இருப்பீர்கள்" என்று மனம் நொந்து எழுதியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் துவங்கி, திரைத்துறை மற்றும் சின்னத்திரை நடிகர் நடிகைகள் அவருக்கு தங்களது அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர்.
கடைசி வரை நிறைவேறாமல் போன மாரிமுத்துவின் ஆசை! கனவு இல்லத்தில் ஒரு நாள் கூட வாழாமல் உயிர்விட்ட சோகம்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.