நியாயம் கிடைத்துள்ளது..! அதிரடியாக பேசும் கௌதமி !

By manimegalai aFirst Published Aug 11, 2019, 7:01 PM IST
Highlights

அண்மையில், காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த 370வது சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு,  அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர் , லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படவுள்ளது. இதுகுறித்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. 

அண்மையில், காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த 370வது சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு,  அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர் , லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படவுள்ளது. இதுகுறித்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. எனவே வரும் அக்டோபர் மாதம் இம்மாநிலம் முறைப்படி இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படவுள்ளது. 

மத்திய அரசின் இந்த,  முடிவிற்கு இந்தியாவில் மட்டும் இன்றி,  சர்வதேச அளவில் பலரிடம், வாழ்த்துக்களை மட்டும் இன்றி , எதிர் மறையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

அதே போல் பிரபலங்களும் சிலர் தங்களுடைய ஆதரவையும் , கண்டனங்களையும் மாறி... மாறி தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை கெளதமி திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் காஷ்மீரில் ஏற்பட்ட மாற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,  'காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு என்றாலும் தேசத்திற்கு நியாயம் கிடைத்துள்ளதாக அதிரடியாக தன்னுடைய கருத்தைதெரிவித்துள்ளார்.

click me!