’படத்துக்கு வா மெஸேஜ்களை விட படுக்கைக்கு வா’ என்கிற மெஸேஜ்கள்தான் அதிகம் வருகின்றன’...இளம் நடிகை பகீர் புகார்...

Published : Jul 06, 2019, 11:37 AM IST
’படத்துக்கு வா மெஸேஜ்களை விட படுக்கைக்கு வா’ என்கிற மெஸேஜ்கள்தான் அதிகம் வருகின்றன’...இளம் நடிகை பகீர் புகார்...

சுருக்கம்

’சினிமா படவாய்ப்புகள் தொடர்பாக வரும் மெஸேஜ்களில் பாதிக்குப் பாதி படுக்கைக்கு அழைக்கும் மெஸேஜ்களாகவே இருக்கின்றன’ என்று பகீர் புகார் தெரிவித்துள்ளார் மலையாளத் திரையுலகின் இளம் வரவான காயத்ரி சுரேஷ்.

’சினிமா படவாய்ப்புகள் தொடர்பாக வரும் மெஸேஜ்களில் பாதிக்குப் பாதி படுக்கைக்கு அழைக்கும் மெஸேஜ்களாகவே இருக்கின்றன’என்று தெரிவித்துள்ளார் மலையாளத் திரையுலகின் இளம் வரவான காயத்ரி சுரேஷ்.

தமிழில் நடிகர், இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ’4ஜி’படத்தில் நடித்து வரும் காயத்ரி சுரேஷ் பல மலையாளப்படங்களிலும் ஒன்றிரண்டு தெலுங்குப் படங்களிலும் நடித்துவருகிறார். சமீபகாலமாக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக கதாநாயகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது ‘மீடூ’வில் தொடர்ந்து புகார்கள் வரும் நிலையில் நடிகை காயத்ரி சுரேஷும் தன் பங்குக்கு புகார் பட்டியல் வாசித்துள்ளார்.

இது தொடர்பாக காயத்ரி சுரேஷ் அளித்த பேட்டியில் “என்னை சிலர் தொடர்பு கொண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு அளிப்பதாகவும், அதற்கு பதிலாக தயாரிப்பாளர்கள் ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும் கூறினர். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு தயாரா? என்று கேட்டு செல்போனில் குறுந்தகவலும் அனுப்புகின்றனர். அவர்கள் அனுப்பிய குறுந்தகவலுக்கு நான் பதில் அளிக்கவில்லை. பதில் சொன்னால் உரையாடல் தொடரும். பதில் அனுப்பாமல் இருந்தால் எனது எண்ணம் புரிந்து ஒதுங்கிவிடுவார்கள்” என்கிறார்.

இந்தித் திரையுலகுக்கு அடுத்த படியாக கேரளத்தில்தான் நடிகைகள் மூலமாக அதிகமான பாலியல் தொல்லை புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!