கமல், ரஜினி, ஜெயலலிதாவை விட உதயநிதிக்கு பல மடங்கு தகுதி உண்டு...பல்லக்கு தூக்கும் மனுஷ்யபுத்திரர்...

Published : Jul 06, 2019, 10:06 AM IST
கமல், ரஜினி, ஜெயலலிதாவை விட உதயநிதிக்கு பல மடங்கு தகுதி உண்டு...பல்லக்கு தூக்கும் மனுஷ்யபுத்திரர்...

சுருக்கம்

ரஜினியும் கமலும் எந்த அரசியல் சித்தாந்த பின்புலம் இல்லாத வெறும் தனி நபர் உதிரிகள். அவர்களுக்கு பல்லக்கு தூக்கும் ஊடகங்கள் உதயநிதிக்கு ஒரு  பொறுப்பு கொடுத்தவுடன் பதறுவது ஏன் என கேள்வி எழுப்புகிறார் ஊடக விவாதங்களில் தொடர்ந்து திமுகவுக்கு பல்லக்கு தூக்கு மனுஷ்ய புத்திரன்.

ரஜினியும் கமலும் எந்த அரசியல் சித்தாந்த பின்புலம் இல்லாத வெறும் தனி நபர் உதிரிகள். அவர்களுக்கு பல்லக்கு தூக்கும் ஊடகங்கள் உதயநிதிக்கு ஒரு  பொறுப்பு கொடுத்தவுடன் பதறுவது ஏன் என கேள்வி எழுப்புகிறார் ஊடக விவாதங்களில் தொடர்ந்து திமுகவுக்கு பல்லக்கு தூக்கு மனுஷ்ய புத்திரன்.

முக.ஸ்டாலின் வார்சி உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணி தலைவர் பொறுப்பு கொடுக்கப்பட்டது தொடர்பாக நடந்து வரும் சர்ச்சைகளுக்கு தனது முகநூல் பக்கத்தில் பக்கம் பக்கமாகபொங்கிவரும் மனுஷ்யபுத்திரன்,...அரசியலில் ரஜினிக்கும் கமலுக்கும் பல்லக்குத் தூக்கி, அவர்கள் உளறுவதையெல்லாம் விவாதமாக்கி இருவரையும் எப்படியாவது திராவிட இயக்கத்தின் மாற்று சக்திகளாக்கிவிடவேண்டும் என தினமும் இருவருக்கும் சொரிந்துகொடுக்கும் ஊடகங்கள் நேற்றிலிருந்து உதய நிதிக்கு என்ன தகுதி இருக்கிறது என கதறிக்கொண்டிருக்கின்றன. உதய நிதி ஒரு அரசியல் குடும்ப, பெரும் கட்சிப் பின்புலத்தில் இருந்து உருவாகி வந்தவர். ஆனால் ரஜினி- கமல் இருவருக்கும் அரசியலோடு உள்ள தொடர்பு என்ன? அவர்களுக்கு என்ன அரசியல் தகுதியைக்கண்டு இவ்வளவு தூரம் அவர்களது பிம்பத்தைக் கட்டமைக்கிறீர்கள்? ஒரு மக்கள் பிரச்சினையிலாவது அவர்கள் முன் நின்றதுண்டா? 

அவர்களுக்கு பல்லக்குத் தூக்கும் நீங்கள் ஒரு மாபெரும் அரசியல் இயக்கத்தில் ஒருவருக்கு ஒரு பொறுப்பு தரப்படும்போது ஏன் பதறுகிறீர்கள்? 
உதய நிதி ஒரு தனி நபர் அல்ல. இந்த மாநில உரிமைகளுக்காகவும் சமூக நீதிக்காகவும் 60 ஆண்டுகளுக்கும் மேலாக போராடிக்கொண்டிருக்கும் ஒரு இயக்கத்தின் ஆயிரக்கணக்கான பொறுப்பாளர்களில் அவரும் ஒருவர். ஆனால் ரஜினியும் கமலும் எந்த அரசியல் சித்தாந்த பின்புலம் இல்லாத வெறும் தனி நபர் உதிரிகள்.

ஸ்டாலின் ஒரு திறமையற்ற தலைவர் , கலைஞர் இல்லாமல் திமுக அழிஞ்சுரும் என்று சொல்லிக்கொண்டிருந்தவன் எல்லாம் 37 தொகுதிகளில் தளபதி ஆப்பு அடித்ததும் கொஞ்சம் திக்பிரமை புடிச்சமாதிரி இருந்தாங்க.. இப்ப உதய நிதியால் கட்சி அழியபோகிறது என்று ஒரே குஷியாக கத்திக்கொண்டிருக்கிறார்கள். பாவம்.. 
இந்த மாநிலத்தை ஆண்ட ஜெயலலிதாவின் தகுதியை விட உதய நிதிக்கு பல மடங்கு தகுதி உண்டு.திமுகவின் அடிமட்டத் தொண்டனின் நலனுக்காக தீக்குளித்து சாகத் தயாராக இருக்கும் நடுநிலையாளர்களுக்கு என் அன்பு வாழ்த்துகள்.’என்று பதிவிட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!