
தான் தங்கியிருந்த லாட்ஜின் படுக்கை விரிப்புகள் சரியில்லாததால் ரூம் வாடகையைத் தர மறுத்து லாட்ஜ் ஓனருடன் பஞ்சாயத்து செய்த நடிகையால் நாகர்கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது.
மலையாளப்பட படப்பிடிப்பு ஒன்றுக்காக நாகர்கோவில் வந்துள்ள மஞ்சு சவேர்கர் என்ற அந்த கேரள நடிகை, தனது அறையில் படுக்கை விரிப்புகள் மாற்றப்படவில்லை எனக் கேட்டுள்ளார். அதற்கு அறை வாடகை பாக்கி 60 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என லாட்ஜ் நிர்வாகம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
அதற்கு மஞ்சு சவேர்கர், ‘வாடகை பாக்கியை தயாரிப்பாளரிடம் கேட்காமல் என்னிடமா கேட்கிறாய் என்று கொந்தளிப்பு நள்ளிரவு என்றும் பாராமல் போலீஸுக்கு போன் செய்தார். இதை ஒட்டி லாட்ஜ் ஓனருக்கும் நடிகைக்கும் இடையில் வாக்குவாதம் வலுத்தது.
தகவலறிந்து வந்த கோட்டார் காவல்துறையினர், இருதரப்பையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.