
‘இசைஞானி இளையாராஜாவுக்கு தயாரிப்பாளர் சங்கம் எடுக்கும் பாராட்டு விழாவைத் தடுக்கும் முயற்சி நடந்தால் அதை யாருமே விரும்பமாட்டார்கள்’ என்று விஷாலுக்கு ஆதரவாக பதிலளித்தார் கமல்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் விஷால் அணியினருக்கும் எதிரணியினருக்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், சற்றுமுன்னர் விமான நிலையத்தில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த கமல்,’ தயாரிப்பாளர் சங்கப் பிரச்சினையில் இளையராஜா பெயரை இழுப்பது சரியான செயல் அல்ல. அதே போல் இப்பிரச்சைகளுக்க்காக அவரது பாராட்டு விழா நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதை ஒருவருமே விரும்பமாட்டார்கள்.
ஆனால் அதே சமயம் சங்கத்தின் கணக்கு வழக்குகள் மீது சந்தேகம் எழுப்பப்படுமானால் அதைத் தீர்த்துவைக்க வேண்டிய கடமை நிச்சயமாக விஷாலுக்கு இருக்கிறது’ என்றார்.
‘சீதக்காதி’ படத்திற்கு தடை கேட்கப்படுகிறதே என்ற மற்றொரு கேள்விக்கு பதிலளித்த கமல்,’ இப்படி தடை கோருவது என் படங்களில் இருந்துதான் துவங்கியது என்று பெருமைப்பட்டுக்கொள்வதைத் தவிர வேறு என்ன சொல்வது? ஆனால் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான போக்கு இது’ என்றார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.