
‘தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்குப் பூட்டுப் போட்டவர்கள் ஏற்கனவே திட்டமிட்டு தொடர்ந்து பிர்ச்சனை செய்துவந்தவர்கள்தான். அவர்களைப் பொருட்படுத்தப்போவதில்லை. சிறு தயாரிப்பாளர்கள் மேல் எந்த அக்கறையும் இல்லாதவர்கள் அவர்களை எப்படி எதிர்கொள்வது என்பது எனக்குத் தெரியும்’ என்கிறார் தயாரிப்பாளர் சங்கத்தலைவர் விஷால்.
நேற்று தயாரிப்பாளர் சங்கத்துக்கு எதிரணியினர் பூட்டுப்போட்டு, விஷால் மீது ஏகப்பட்ட அவதூறுகளை அள்ளி வீசியபோது, ஏறத்தாழ தலைமறைவாக இருந்த விஷால் இரவில் தனது ஆதரவாளர்களுடன் ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களுக்கு மிக சுருக்கமாகப் பேட்டி அளித்த அவர், ‘எனக்கு எதிராகப் போராடுபவர்களின் நோக்கம் கீழ்த்தரமானது.
சங்கம் தொடர்பான கணக்கு வழக்குகள் விரைவில் பொதுக்குழுவில் சமர்ப்பிக்கப்படும். இப்போது அவர்கள் போராடுவதற்குக் காரணம் இசைஞானி இளையராஜாவை வைத்து சங்கம் எடுக்கவிருக்கும் விழாவை தடுக்க நினைப்பதுதான். அப்படி விழா நடந்து 10 கோடி ரூபாய் வசூலானால் அது சிறு தயாரிப்பாளர்களின் நலனுக்கே பயன்படுத்தப்படும். அப்படி ஒரு நல்ல காரியம் நடந்துவிடாமல் தடுக்கவே இவர்கள் சதி செய்கிறார்கள்’ என்கிறார் விஷால்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.