சீக்ரெட் கிரஷ்... விஷயத்தில் பிந்து மாதவிற்கு இப்படி பிரச்சனையா?

By manimegalai aFirst Published Apr 4, 2020, 2:14 PM IST
Highlights

தமிழில், 'பொக்கிஷம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிந்து மாதவி. இதை தொடர்ந்து, தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்தி வந்தார். எனினும் அவ்வப்போது தமிழிலும் சில படங்களில் நடித்தார்.
 

நடிகை பிந்து மாதவி:

தமிழில், 'பொக்கிஷம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிந்து மாதவி. இதை தொடர்ந்து, தெலுங்கு திரையுலகில் கவனம் செலுத்தி வந்தார். எனினும் அவ்வப்போது தமிழிலும் சில படங்களில் நடித்தார்.

தமிழ் படங்கள் :

அந்த வகையில் இதுவரை, வெப்பம், கழுகு, சட்டம் ஒரு இருட்டரை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பசங்க 2 , போன்ற பல படங்களில் நடித்தார்.

சமீபத்தில் இவர் நடிப்பில், கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற கழுகு படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. ஆனால் கழுகு 2 திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. 

தற்போது நடித்து வரும் படங்கள்:

இந்த படத்தை தொடர்ந்து, தெலுங்கில் இவரின் கைவசம் ஒரு படம் கூட இல்லை என்றாலும், தமிழில் 'மாயன்' மற்றும் 'யாருக்கும் அஞ்சலே' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ஏமாற்றிய பிக்பாஸ்:

பிந்து மாதவி, நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் வயல் கார்டு சுற்று மூலம் உள்ளே நுழைந்தார். இதில் கலந்து கொண்டு விளையாடிய அனைவர்க்கும் பட வாய்ப்புகள் கிடைத்த போதிலும் பிந்து மாதவிக்கு அவர் எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் அமையவில்லை.

சீகிரெட் கிரஷ்:

இந்நிலையில் நடிகை பிந்து மாதவியிடம் சிகரெட் கிரஷ் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் அவருடைய ரசிகர். இதற்கு தனக்கு ஒரு ரகசிய கிரஷ் இருந்ததாகவும், அதில் சில சிக்கல்கள் வந்து விட்டதால், இப்போது நான் சிங்கள் தான் என கூறியுள்ளார்.

click me!