’நடிகர் ஜெய்யுடன் திருமணம்...சினிமாவுக்கு டாட்டா?’... என்ன சொல்கிறார் அஞ்சலி...

Published : Mar 30, 2019, 10:07 AM IST
’நடிகர் ஜெய்யுடன் திருமணம்...சினிமாவுக்கு டாட்டா?’... என்ன சொல்கிறார் அஞ்சலி...

சுருக்கம்

’எனக்கு வேண்டாதவர்கள் யாரோ திட்டமிட்டு என்னைப் பற்றிய தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள்.  இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளப் போகிற எண்ணமோ எப்போதைக்கும் சினிமாவை விட்டு ஒதுங்குகிற எண்ணமோ எனக்கு இல்லவே இல்லை’ என்கிறார் நடிகை அஞ்சலி.


’எனக்கு வேண்டாதவர்கள் யாரோ திட்டமிட்டு என்னைப் பற்றிய தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள்.  இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ளப் போகிற எண்ணமோ எப்போதைக்கும் சினிமாவை விட்டு ஒதுங்குகிற எண்ணமோ எனக்கு இல்லவே இல்லை’ என்கிறார் நடிகை அஞ்சலி.

சில மாதங்களாகவே, தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வரும் அஞ்சலிக்கும், நடிகர் ஜெய்க்கும் காதல் என்று கிசுகிசுக்கள் பரவின. பின்னர் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. பிரித்தவர்களே மீண்டும் அவர்களை சேர்த்துவைத்து  தற்போது திருமணம் செய்துகொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இது குறித்துப் பேசிய அஞ்சலி,’’நான் டப்பிங் கலைஞராக சினிமா பயணத்தை ஆரம்பித்து, அதன்பிறகு நடிகையானேன். அம்மாவுக்கு நடிகையாக ஆர்வம் இருந்தது. அது பலிக்காததால் என்னை நடிகையாக்கி கனவை நிறைவேற்றிக்கொண்டார்.  சில தங்களாகவே நான் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகப்போகிறேன் என்று தகவல்கள் பரவி உள்ளன. அதில் சிறிதும் உண்மை இல்லை.

திருமண செய்தியே பொய். அப்படி திருமணம் செய்துகொண்டாலும் சினிமாவை ஏன் விட வேண்டும். கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆர்வம் உள்ளது. புதிதாக நடிக்க வரும் நடிகைகளுக்கு நான் சொல்லும் அறிவுரை என்னவென்றால் முழுமையான நடிகை ஆவதற்கு நடிப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் அக்கறையும், ஆர்வமும் இருக்க வேண்டும். சாதிக்க பிடிவாதமும் இருக்க வேண்டும்.

நான் மற்றவர்களை நோகடிப்பதாக பேசுகிறார்கள். அதில் உண்மை இல்லை. இதுவரை யாரையும் நோகடித்தது இல்லை. என்னை பற்றி வதந்திகள் வரும்போது ஆரம்பத்தில் வருத்தப்பட்டேன். இப்போது கண்டு கொள்வது இல்லை. ஏனென்றால் வதந்தி எது உண்மை எது என்பதை ரசிகர்கள் சரியாகவே புரிந்துவைத்திருக்கிறார்கள்’ என்கிறார் அஞ்சலி.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!