Latest Videos

"அவர் இன்றி என் பயணம் சாத்தியமில்லை".. தன் வாழ்க்கையை செதுக்கிய ஆசான் - கியூட் கிளிக் வெளியிட்ட ராதிகா!

By Ansgar RFirst Published Jun 10, 2024, 10:19 PM IST
Highlights

Radhika Sarathkumar : பிரபல நடிகை ராதிகா சரத்குமார், வரலட்சுமியின் திருமணத்திற்கு பிரபலங்கள் அனைவரையும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

கடந்த 1978 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான "கிழக்கே போகும்" ரயில் என்கின்ற திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கிய நடிகை தான் ராதிகா சரத்குமார். முதல் திரைப்படத்திலேயே FlimFare விருது பபெற்ற வெகு சில நடிகைகளில் ஐவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரை உலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நாயகியாக கலக்கியவர் தான் ராதிகா. இவருடைய துணிச்சலான குணத்திற்காக பெரிய அளவில் திரையுலகினரால் விரும்பப்படும் ஒரு நடிகை ராதிகா சரத்குமார். 

Priya Bhavani Shankar : "முருகா உனக்கு வந்த அதே சோதனை" அப்சட்டான பிரியா பவானி சங்கர் - வெளியிட்ட வீடியோ வைரல்!

கடந்த 1978 ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை சுமார் 46 ஆண்டுகளாக இந்திய மொழிகள் பலவற்றில் முன்னணி நடிகையாக பலம் வரும் அவர் இறுதியாக தமிழில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான "மெர்ரி கிறிஸ்மஸ்"  திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். தற்பொழுது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் "துருவ நட்சத்திரம்" திரைப்படத்திலும் ராதிகா சரத்குமார் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இப்பொது வரலட்சுமிக்கு திருமணம் நடக்கவுள்ள நிலையில், ராதிகா சரத்குமார் தனது ஆசான், மூத்த இயக்குனர் பாரதிராஜா அவர்களை நேரில் சந்தித்து திருமணத்திற்கான அழைப்புகளை அவருக்கு கொடுத்திருக்கிறார். மேலும் அவரோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ராதிகா சரத்குமார் தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

Ammu Abirami: முட்டி கிச்சு லவ்வு... பிரபலத்துடனான காதலை கன்ஃபாம் செய்த அம்மு அபிராமி! வைரலாகும் புகைப்படம்!

click me!