
வேற்றுமொழி திரைப்படங்களில் அவ்வப்போது நடித்து வந்தாலும், தமிழில் கடந்த 1988ம் ஆண்டு வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் "தர்மத்தின் தலைவன்" திரைப்படத்தில் இளைய திலகம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் களம் இறங்கிய நடிகை தான் குஷ்பு. அதன் பிறகு இவர் நடிப்பில் வெளியான "வருஷம் 16" என்கின்ற திரைப்படம் சில்வர் ஜூப்ளி திரைப்படமாக மாறியது.
குஷ்பூவும் தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற நடிகையாக மாறினார். இன்றளவும் தமிழ் சினிமாவில் ஒரு நடிகைக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது என்றால் அது குஷ்புவிற்கு மட்டுமே என்றால் அது மிகையல்ல. தமிழ் திரை உலகில் அறிமுகமான வெகு சில ஆண்டுகளில் மிகப்பெரிய நட்சத்திரமாக மாறிய குஷ்பூ. திரையுலகில் அறிமுகமான சில ஆண்டுகளிலேயே 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மிகப்பெரிய புகழ்பெற்றார்.
தனுஷ் பட இயக்குனரோடு இணையும் லெஜெண்ட்.. லுக் டெஸ்ட் கூட முடிஞ்சுருச்சாம் - அதிரடி ஆக்ஷனில் சரவணன்!
இந்த சூழலில் கடந்த 1995 ஆம் ஆண்டு இயக்குனராக தமிழ் திரை உலகில் அறிமுகமான சுந்தர் சி அவர்களுடைய இயக்கத்தில் உருவான "முறைமாமன்" என்கின்ற திரைப்படத்தில் நடித்தார் குஷ்பூ. அந்த திரைப்படத்தின் போது தான் சுந்தர் சி-க்கும், குஷ்பூக்கும் இடையே காதல் மலர்ந்தது. சரியாக இந்த பிப்ரவரி 22ஆம் தேதி 1995ம் ஆண்டு தான் சுந்தர் சி தனது காதலை குஷ்புவிடம் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த ஜோடி சுமார் ஐந்து ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில், கடந்த 2000வது ஆண்டு இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 24 ஆண்டுகளாக மிகச் சிறந்த ஜோடிகளாக இவர்கள் திகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தங்களுடைய 29வது ஆண்டு "காதல் தினத்தை" இந்த பிப்ரவரி 22 2024ம் ஆண்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தனது ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார் குஷ்பூ.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.