அமலா பால் குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் சோகம்... பட விழாவை ரத்து செய்துவிட்டு கண்ணீருடன் கதறியடித்து ஓட்டம்..!

By Kanimozhi Pannerselvam  |  First Published Jan 22, 2020, 11:37 AM IST

இந்நிலையில் அமலா பால் தந்தை பால் வர்கீஸ் மரணமடைந்தது அவரது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலா பால். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான "ஆடை" படம் விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாக சிறப்பான வரவேற்பை பெற்றது. அதனால் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆக்‌ஷன் ஹீரோயினாக அமலா பால் நடித்துள்ள "அதே அந்த பறவை போல" படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் அமலா பால் தந்தை பால் வர்கீஸ் மரணமடைந்தது அவரது குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: "நெற்றிக்கண்" இரண்டாம் பாகத்தில் தனுஷ் - கீர்த்தி சுரேஷ்?... கோலிவுட்டை பரபரப்பாக்கிய தகவல்...!

அமலா பாலின் தந்தை பால் வர்கீஸ் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பால் வர்கீஸ், சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 61. 

இதையும் படிங்க: வெறித்தனமா வெளுத்து வாங்கும் அஜித்... லீக்கானது "வலிமை" பைட் சீன் போட்டோ..!

அமலா பால் தந்தையின் இறுதிச் சடங்கு இன்று மதியம் 3 மணிக்கு குருப்பம்பாடியில் உள்ள புனித பீட்டர் மற்றும் புனித பால் தேவலாயத்தில் நடைபெற உள்ளது. 

"அதே அந்த பறவை போல" டிரெய்லர் ரிலீஸ் நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்த அமலா பால், இந்த அதிர்ச்சியான செய்தியைக் கேள்விப்பட்டு உடனடியாக கேரளா திரும்பினார். அமலா பாலின் தந்தை மறைவிற்கு திரைத்துறையினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

click me!