ஃபாரின் சரக்கில் கிக் இல்லை... ஒரு பானை கள்ள அலேக்காக ஊத்திக்கிட்ட அமலாபால்... சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படம்...!

Published : Dec 05, 2019, 12:35 PM IST
ஃபாரின் சரக்கில் கிக் இல்லை... ஒரு பானை கள்ள அலேக்காக ஊத்திக்கிட்ட அமலாபால்... சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படம்...!

சுருக்கம்

கேரளாவில் உள்ள ஆலப்புலாவில் தென்னை மரத்தின் அடியில் நின்று ஒரு பானை கள்ளைக் குடிப்பது போன்ற புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார் அமலா பால். தற்போது அந்தப் புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டுள்ளார். 

பிரபல நடிகை அமலா பால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்தார். சும்மா 4 பாட்டு, கிளாமர் ஆட்டம், ஹீரோ பின்னாடி லவ் பண்ணிட்டு சுத்துறதுன்னு இல்லாமல், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களில் மட்டுமே நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்த 'அம்மா கணக்கு',  'ஆடை' போன்ற படங்கள் சிறப்பான வரவேற்பு பெற்றன. 'ஆடை' படத்தில் எந்த ஹீரோயினும் செய்ய துணியாத காரியத்தை செய்தார். படத்தின் பெரும்பாலான காட்சிகளில் ஆடை இல்லாமல் நடித்து அசத்தினர். இந்த படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்த போதும், நல்ல படியாக ஓடியது. என்னதான் படத்தில் கிளாமர் பாட்டுக்கு குத்தாட்டம் போடலன்னாலும், அமலா பால் செம செக்ஸியான போட்டோ ஷுட்களை  நடத்தி, அவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.  

"ஆடை" படத்தை தொடர்ந்து "அதோ அந்த பறவை போல" என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் அமலா பால். கேரளா, கர்நாடக எல்லையில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியின் அடர்ந்த காட்டுக்குள் நடக்கிற உயிரை உறைய வைக்கும் அட்வென்ஞ்சர் த்ரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது. செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்துள்ள படத்தில், கே.ஆர்.வினோத் என்பவர் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.  இந்த படத்தின் ஷூட்டிங்கிறாக வனப்பகுதிகளில் தங்கிய படக்குழுவினர் தங்கியுள்ளனர், அப்போது விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தியுள்ளார் அமலா பால். குறிப்பாக தண்ணீர் தொட்டியில் குளிப்பது போன்ற டாப்லெஸ் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. 

கேரளாவில் உள்ள ஆலப்புலாவில் தென்னை மரத்தின் அடியில் நின்று ஒரு பானை கள்ளைக் குடிப்பது போன்ற புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார் அமலா பால். தற்போது அந்தப் புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் சோசியல் மீடியாவில் வேற லெவலில் வைரலாகி வருகிறது. அதைப் பார்த்த நெட்டிசன்கள் ஒரு மரத்து கள்ளு குடிச்சா உடம்புக்கு நல்லது, அதை எப்படி எல்லாம் குடிக்கனும், எந்த சைடு டிஷ் நல்லா இருக்கும் என அட்வைஸ் செய்து வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தங்கமயிலின் 80 சவரன் நகையில் 8 சவரன் மட்டும் தங்கம் : கதிரிடம் உண்மையை வெளிப்படுத்திய ராஜீ!
இன்னும் 100 நாளில் சம்பவம் இருக்கு... கவுண்ட் டவுன் உடன் வெளிவந்த டாக்ஸிக் அப்டேட்