நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா பாதிப்பு..! அடுத்தடுத்து பாதிக்கப்படும் பாலிவுட் பிரபலங்கள்!

Published : Apr 02, 2021, 10:37 AM IST
நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா பாதிப்பு..! அடுத்தடுத்து பாதிக்கப்படும் பாலிவுட் பிரபலங்கள்!

சுருக்கம்

கொரோனா தொற்று, மீண்டும் இந்தியாவின் தன்னுடைய கொடூர முகத்தை காட்ட துவங்கியுள்ளது. இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தனிமை படுத்திக்கொண்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.  

கொரோனா தொற்று, மீண்டும் இந்தியாவின் தன்னுடைய கொடூர முகத்தை காட்ட துவங்கியுள்ளது. இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தனிமை படுத்திக்கொண்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

கடந்த மாதத்தில் இருந்தே... தமிழகம், கர்நாடகா, கேரளா, குஜராத், மஹாராஷ்டிரா, மும்பை ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. எனவே மக்கள் வெளியில் செல்லும் போது முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்து வருகிறார்கள்.  இந்நிலையில் கடந்த ஒரு சில வாரங்களாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மீண்டும் ஊரடங்கு போடப்படும் நிலை உருவாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் தான் பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான், மாதவன், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் இர்பான் பதான் ஆகியோர் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களை தொடர்ந்து, பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை அவரே உறுதி செய்துள்ளார். தற்போது இவர் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள RRR படத்தில், சீதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும், மருத்துவரின் அறிவுரைப்படி பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ள, ஆலியா பட்டிற்கு அவரது ரசிகர்கள் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என்று வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

The Raja Saab Day 3 Box Office : இன்னும் 5 கோடி தான்... பாக்ஸ் ஆபிஸில் மேஜிக் நம்பரை நெருங்கும் 'தி ராஜா சாப்'
Ayyanar thunai: அய்யனார் துணை ஜோடிக்கு விரைவில் திருமணம்! சீரியல் செட்டில் தொடங்கிய காதல்… கல்யாண மேடையில் முடியும் கதை!