பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றதால் இந்த கெட்டபழக்கத்திற்கு அடிமையான நடிகை! பிரபல இசையமைப்பாளரின் பகீர் தகவல்!

Published : Apr 25, 2021, 12:08 PM ISTUpdated : Apr 26, 2021, 10:47 AM IST
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றதால் இந்த கெட்டபழக்கத்திற்கு அடிமையான நடிகை! பிரபல இசையமைப்பாளரின் பகீர் தகவல்!

சுருக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பின்னர், புகைப்பழக்கத்திற்கு அடிமையானதாக நடிகை ஒருவர், கூறிய தகவலை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், முகநூல் பக்கம் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.  

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று வந்த பின்னர், புகைப்பழக்கத்திற்கு அடிமையானதாக நடிகை ஒருவர், கூறிய தகவலை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், முகநூல் பக்கம் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழில் இதுவரை 4 சீசன்களை எட்டியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். வெவ்வேறு துறை, வெவ்வேறு மொழி, என இதற்கு முன் பழகிடாத நபர்களுடன் ஒரே வீட்டில் 100 நாட்கள் இருந்து, பல்வேறு சவால்களை கடந்து... ஒரு சில பிரபலங்கள் மட்டுமே ஃபைனலுக்குள் நுழைகிறார்கள். 

அதே நேரத்தில் 100 நாட்கள் எவ்வித வெளியுலக தொடர்பும் இல்லாமல் பிரபலங்கள் வாழ வேண்டும் என்பதும் சாதாரண விஷயம் அல்ல. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன், புகை பிடிப்பதில் ஸ்மெல் கூட பிடிக்காமல் இருந்த நடிகை ஒருவர், புகைப்பழக்கத்திற்கு அடிமை ஆகியுள்ளது குறித்து, ஜேம்ஸ் வசந்தன் தன்னுடைய பதிவில் போட்டுள்ளார். 

இது குறித்து அவர் குறிப்பிட்டிருப்பதாவது...

 "பிரபலமான அந்த திரைப்படக் கலைஞரான இளம்பெண்ணும் நானும் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம். ஓட்டலில் இருந்து அந்த நிகழ்ச்சி இடத்துக்குச் செல்லும் வழியில் டீ குடிக்க வண்டியை நிறுத்தினார்கள். மற்றவர்கள் டீ குடிக்கச் சென்றார்கள்.

அவள் டீ குடிப்பதில்லை என்று சொல்லிவிட்டு, என்னிடம் கொஞ்சம் தயங்கியபடியே, "தயவுசெய்து தப்ப நெனச்சிக்காதிங்க.. நான் கொஞ்சம் அந்தப் பக்க்கம் போயி.." என்று கையில் இருந்த சிகரெட்டைக் காண்பித்துக் கெஞ்சுவது போல கண்ணாலேயே சைகை செய்தாள்.

நான் "ஹேய்.. அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்ல..";  என்று சொல்லி அனுப்பி வைத்தேன்.

புகையாற்றி, கொஞ்ச நேரம் கழித்துத் திரும்பி வந்த அவள் "Soooooory.." என்று நெளிந்தாள்.

"எதுக்கு?" என்றேன்.

"Shock இல்ல.. bit surprised. Didnt know that you smoke"என்றேன்.

எல்லாம் இந்த Bigg Boss-னால வந்தது. அந்த வீட்டுக்குள்ளப் போயிட்டு யாராவது சிகரெட் பிடிக்காம வெளிய வரமுடியுமா? என்றாள்.

அப்படியா? என்று ஆச்சரியப்பட்டேன்.

ஆமா. அங்கருக்க டென்ஷன்.. பிரஷ்ஷருக்கு இது ஒண்ணுதான் outlet. பாக்கெட் பாக்கெட்டா கிடைக்கும்

இதுக்கு முன்னாடி நீ ஸ்மோக் பண்ணதுல்ல?

நோ.. நெவர்!.. அந்த inclination கூட கெடயாது. பாவம்.. எங்கம்மாவுக்குத் தெரியாது

என்று அந்த இளம்பெண் பேசியதை ஷேர் செய்துள்ளார். இவரது இந்த பதிவு பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!
ஸ்வீட் எடு கொண்டாடு: எலிமினேஷனில் இருந்து கிரேட் எஸ்கேப்: பாரு ஹேப்பி அண்ணாச்சி!