“இறந்த மருத்துவர்களை அவமானப்படுத்தாதீர்கள்”... நடிகர் விவேக்கின் உருக்கமான கோரிக்கை...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 20, 2020, 7:00 PM IST
Highlights

இதனிடையே, டாக்டரின் உடலை அடக்கம் செய்ய அண்ணா நகர் வேலங்காடு பகுதிக்கு கொண்டு சென்றனர். அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். 

கொரொனாவால் உயிரிழந்த மருத்துவரை அடக்கம் செய்யவிடாமல் தடுத்ததை நினைத்து சக மருத்துவர் ஒருவர் கண்ணீர் விட்டு அழுத வீடியோ கணத்த இதயங்களையும் கதற வைத்துள்ளது. கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனராக பணிபுரிந்த 55 வயது நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கொரோனா உறுதி செய்யப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

ஏற்கனவே சிறுநீரக கோளாராறு காரணமாக டையாலிஸ் சிகிச்சையில் இருந்த அவர், கொரோனாவின் தாக்கத்தால் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று  உயிரிழந்தார். இதனிடையே, டாக்டரின் உடலை அடக்கம் செய்ய அண்ணா நகர் வேலங்காடு பகுதிக்கு கொண்டு சென்றனர். அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். சிலர் கற்கள் மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில், ஆம்புலன்ஸ் கண்ணாடி உடைந்தது. ஊழியர் காயமடைந்தார்.இச்சம்பவம் மருத்துவர்களையும் செவிலியர்களையும் மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது. 

இந்நிலையில் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்த 20 பேர் மீது காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தால், ஊரடங்கு உத்தரவு மீறல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்துள்ளனர். இந்த சோகமான செய்தியை கேள்விப்பட்ட நடிகர் விவேக் தனது மனம் நொந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இதையும் படிங்க: தனது சாம்ராஜ்யத்தை சரித்தவரையே வளைத்து போட்ட ராஜமெளலி... “ஆர்ஆர்ஆர்” படத்தை தொடர்ந்து அடுத்த அதிரடி....!

அதில், ஒரு மருத்துவர் இறந்தால் கூட அவருடை அடக்கத்தை போலீஸ் பாதுகாப்புடன் செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். சைமன்னு ஒரு மருத்துவர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார். அவருடைய உடலை கீழ்ப்பாக்கத்திலும் அடக்கம் செய்ய முடியவில்லை, அண்ணாநகரிலும் அடக்கம் செய்ய முடியவில்லை. அப்பகுதி மக்கள் தங்களுக்கு கொரோனா தொற்று வந்துவிடுமோ என்று அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். WHO மற்றும் லாஜிக்கல் இந்தியா போன்ற இணையதளத்தில், இறந்தவர்கள் உடலில் கரோனா இருக்காது என்று கூறப்பட்டுள்ளது. அந்த உடலை எரித்தாலும், புதைத்தாலும் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை. சாதாரண மனிதர்களை நாம் இறந்த பிறகு அவமதிக்க கூடாது. அதுவும் இந்த சமயத்தில் மருத்துவர்கள் எல்லாம் நடமாடும் தெய்வங்கள், அவர்களை மதிக்க வேண்டும். இருக்கும் போது கொண்டாடாமல் விட்டாலும், இறக்கும் போதாவது அவர்களை அவமதிக்காமல் இருக்க வேண்டும். இந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினரை பாதித்துள்ளது, அவர்களுக்காக பிரார்த்திப்போம்.  மனிதநேயம் காப்போம் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

My salutations to all the Doctors, nurses n health care workers thru out the nation n world! They after all die for our cause🙏🏼 pic.twitter.com/8MHbVD1Mbe

— Vivekh actor (@Actor_Vivek)
click me!