
நவீன தொழில்நுட்ப காலத்தில், அனைத்து வேலைகளும் சுலபமாகி விட்டது. இதன் விளைவு, நாளுக்கு நாள் குழந்தைகள் முதல் இளைஞர்கள் என அனைவரும் செல்போன், இன்டர்நெட் போன்றவற்றிற்கு அடிமையாகி வருகிறார்கள். இதன் மூலம் எதிர்பாராத பல தவறுகளும் நடக்கிறது.
இந்த நிலையில், அதிகமாக இளைஞர்கள் பயன்படுத்தும் நெட் சேவையை, குறைக்கும் விதமாக ஜப்பான் நாட்டினர் கையாண்டு வரும் முறை குறித்து, நடிகர் விவேக் முதல் முறையாக ட்விட்டர் மூலம் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளது ஜப்பான் நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் வாரத்தில் இரண்டு நாட்கள் இண்டர்நெட்டை இளையதலை முறையினர் பயன்படுத்த வேண்டாம் என்றும், அந்த இரண்டு நாட்களில் பெற்றோர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுங்கள் என்றும், விளையாட்டில் ஈடுபடுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளது. இதனால் மனம் ரிலாக்ஸ் ஆவதுடன் இண்டர்நெட்டில் அடிமையாகும் ஆபத்தும் நீங்குகிறது, குற்றச்செயல்களும் குறைகிறது என தெரிய வந்துள்ளது. என கூறி ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு பலர் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.