
தளபதி விஜய் நடிப்பில் கடந்த 2016 ஆண்டு , இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'தெறி' . இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு , வசூல் சாதனையும் செய்தது.
மேலும், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனாவின் மகள் குட்டி நைனிகாவின் நடிப்பும், அவருடைய மழலை தனமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த நிலையில் இந்த படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளனர். இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலில், இந்த படத்தின் ரீமேக்கில் விஜய் நடித்த ஹீரோ கதாப்பாத்திரத்தில் நடிக்க இருந்தவர் நடிகர் பவன் கல்யாண்.
ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக இந்த படத்தில் அவரால் நடிக்க முடியாவில்லை. எனவே திடீர் என இப்படத்தின் ஹீரோ மாற்றப்பட்டுள்ளார். அதன்படி தெலுங்கு முன்னணி நடிகர் ரவி தேஜா ஹீரோவாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து, இதுவரை எந்த அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.