நாக சைதன்யா இருந்தால் அதை தொடக்கூட மாட்டேன்! சமந்தாவுக்கு கணவர் போட்ட கண்டிஷன்?

Published : Mar 14, 2019, 06:09 PM IST
நாக சைதன்யா இருந்தால் அதை தொடக்கூட மாட்டேன்! சமந்தாவுக்கு கணவர் போட்ட கண்டிஷன்?

சுருக்கம்

திருமணத்திற்கு பிறகும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும், சமந்தா முதல் முறையாக அவருடைய கணவர் போட்ட ஸ்ராங் கண்டிஷன் குறித்து பேசியுள்ளார்.  

திருமணத்திற்கு பிறகும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும், சமந்தா முதல் முறையாக அவருடைய கணவர் போட்ட ஸ்ராங் கண்டிஷன் குறித்து பேசியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, கடந்த 2017 ஆம் ஆண்டு, பல வருடங்களாக தான் காதலித்து வந்த பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்பு சமந்தா நடிக்க மாட்டார் என கூறப்பட்ட நிலையில், அடுத்தடுத்து தமிழ், மற்றும் தெலுங்கு மொழி படங்களில் கமிட் ஆகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

மேலும் தற்போது தமிழில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடித்து சூப்பர் ஹிட் ஆன, 96  படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். 

இந்நிலையில் தற்போது தன்னுடைய கணவருக்கு பிடிக்காத விஷயம் குறித்து சமந்தா பகிர்ந்துள்ளார்.

அதாவது, சமந்தாவின் கணவர் நாக சைதன்யாவிற்கு சோசியல் மீடியா என்றால் சுத்தமாக பிடிக்காதாம். "திரையில் தான் நம்மை ரசிகர்கள் பார்க்கிறார்கள்.

நம் சொந்த வாழக்கையையும் படம் பிடித்து  சமூக வலைத்தளங்களில் போட்டு அதையும், அவர்கள் பார்க்க வேண்டுமா என்ன?" என்று கேட்பாராம். அதனால் நாக சைதன்யா அருகில் இருந்தால் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என எந்த சமூக வலைத்தளம் பக்கமும் போகவே மாட்டேன்,  என கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜெயிலில் கம்பி எண்ண போகும் பாண்டியன் அண்ட் ஃபேமிலி – அரசி, ராஜீ மீது பாவப்பட்ட இன்ஸ்: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
பராசக்தி என்ன பராசக்தி இதோ வருது பாரு ஜன நாயகன்: டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!