
உலகில் உள்ள ஜீவ ராசிகளுக்கும், அதில் வாழும் மனிதர்களுக்கும் கிட்ட தட்ட 20% ஆக்சிஜனை கொடுத்து, உயிர் வாழ வைத்து கொண்டிருக்கிறது அமேசான் காடு. இங்கு, கடந்த சில தினங்களாகவே தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. காற்று பலமாக வீசுவதால், எதிர்பார்த்ததை விட தீ மளமளவென பரவி, காட்டி உள்ள மரங்கள், அறிய வகை செடி, உயிரினங்களை தீக்கிரையாக்கி வருகிறது.
இது குறித்து பல பிரபலங்கள், தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நடிகை அக்ஷய் குமார், நடிகை சிம்ரன் ஆகியோர், அமேசான் தீ குறித்து மீடியாக்கள் அதிகம் கண்டு கொள்ளாதது ஏன் என கேள்வி எழுப்பி இருந்தனர்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மிகுந்த கவலையை தெரிவித்து வருகின்றனர். அந்த வங்கியில் காமெடி நடிகர் விவேக் தன்னுடைய ஆதங்கத்தை, கொட்டி தீர்த்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ள பதிவில்...
'நம்மால் அமேசான் காட்டில் எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்க முடியாது. நம்மால் அமேசானில் பொருட்களை வாங்கவும் அமேசான் பிரைம் பார்க்கவும் ஆர்டர் போட மட்டும்தான் தெரியும். ஆனால் நாம் ஒன்றிணைந்தால் ஒன்றை செய்ய முடியும். நாம் இருக்கும் இடத்தில் மரங்களை தொடர்ந்து நடுவதன் மூலம் ஒரு புதிய அமேசான் காடுகளை உருவாக்க முடியும். அமேசான் காடுகளில் எரியும் தீயை அணைக்க வருணபகவான் உதவி செய்ய பிரார்த்தனை செய்வோம்' என்று விவேக் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.