
கொரோனா பிரச்சனை திரைத்துறையை விட விஷ்ணு விஷாலை தான் வேகமாக சுழட்டி அடித்துள்ளது. பிரபு சாலமன் இயக்கத்தில் நடித்த “காடன்” திரைப்படமும், எழில் இயக்கத்தில் நடித்த “ஜகஜால கில்லாடி“ படமும் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீஸுக்கு தயாராக இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டதால், இரண்டு படங்களையும் ரிலீஸ் செய்ய முடியாமல் போனது.
இதையும் படிங்க: மாமியாருடன் நயன்தாரா எடுத்த கூல் செல்ஃபி... வைரலாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் அடக்க ஒடுக்கமான போஸ்...!
அடுத்து மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் “எஃப்ஐஆர்” படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங்கும் கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து களவு படத்தை இயக்கிய முரளி கார்த்திக் இயக்கத்தில் “மோகன்தாஸ்” என்ற படத்தில் விஷ்ணு விஷால் நடிக்க உள்ளார். அந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க: “என் புருசனை திருடிய நயன்தாராவை எங்கு பார்த்தாலும் உதைப்பேன்”... பிரபுதேவா மனைவி ஆவேசம்...!
தற்போது இரண்டாம் கட்டமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலில் அறிவிக்கப்பட்ட 21 நாளையே வீட்டிற்குள் முடங்கி கிடக்க முடியாமல் தவித்த மக்கள், மேலும் நீட்டிக்கப்பட்டதால் கிடைத்த நேரத்தை எப்படி செலவிடுவது என்று தெரியாமல் சோசியல் மீடியாவில் பொழுது போக்கு வருகின்றனர்.
இதையும் படிங்க: ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் செம்ம கவர்ச்சி... ஊரடங்கு நேரத்தில் நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொள்ளும் ஷாலு ஷம்மு!
இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் போட்டுள்ள உருக்கமான ட்விட்டர் பதிவு, ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது. மகன் ஆர்யனை சந்திக்க காத்திருப்பதாக பதிவிட்டுள்ளார். மேலும் மனிதத்திற்காக பிரார்த்திக்க வலியுறுத்தியுள்ள விஷ்ணு விஷால், மகனின் அழகான புன்னகை பூத்த போட்டோஸை பகிர்ந்து லாக்டவுன் நேரத்திலும் இவன் இப்படித்தான் என்று பதிவிட்டுள்ளார். இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.