ஆடி மாசம் சாமியாட தயாராகும் நயன்தாரா...“மூக்குத்தி அம்மன்” எக்ஸ்குளூசிவ் அப்டேட்...!

By Kanimozhi Pannerselvam  |  First Published Apr 17, 2020, 3:27 PM IST

இது அம்மன் படம் தானே அதனால் படத்தை ஆடி மாதத்திற்கு ரிலீஸ் செய்யலாம் என்ற ஐடியாவில் இருக்கிறார்களாம்.


ஆர்.ஜே.பாலாஜி , என்.ஜே.சரவணன் இணைந்து இயக்கியுள்ள படம் மூக்குத்தி அம்மன். இதில் ஆர்.ஜே.பாலாஜி, நயன்தாரா, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் நயன்தாரா அம்மன் கெட்டப்பில் நடிக்க விரதம் எல்லாம் இருந்தார். எல்.கே.ஜி படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. 

Latest Videos

undefined


கொரோனா பிரச்சனை ஆரம்பிக்கிறது முன்னாடியே கன்னியாகுமரி மற்றும் சென்னையில் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் படக்குழுவினர் நடத்தி முடித்துவிட்டனர். படத்தை பற்றி ஏற்கனவே மெளனம் கலைந்த ஆர்.ஜே.பாலாஜி, மூக்குத்தி அம்மன் கதை நிஜ கடவுளுக்கும், மனிதனால் உருவாக்கப்படும் கடவுளுக்கும் இடையே நடக்கும் போராட்டம் என்று குறிப்பிட்டிருந்தார். 


தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மூக்குத்தி அம்மன் படத்திற்கான பின்னணி இசை வேலைகளை இசையமைப்பாளர் தீவிரமாக இறங்கியுள்ளாராம். முதலில் மே மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த படக்குழுவினர் இரண்டு போஸ்டர்களை ரிலீஸ் செய்திருந்தனர். 

முழுக்க முழுக்க அம்மனாகவே காட்சி தந்த நயன்தாராவின் செகண்ட் லுக் போஸ்டர் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலானது. சிலர் நயன்தாரா அம்மன் கெட்டப்பிற்கு பொருத்தமாகவே இல்லை என்றும், அம்மன் ஏன் பயந்த மாதிரி இருக்கு என்று கலாய்த்திருந்தனர். இந்நிலையில் கொரோனா பிரச்சனை உச்சத்தில் இருப்பதால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன, ஒருவேலை மே மாதத்திற்கு பிறகு தியேட்டர்கள் அனைத்தும் திறக்கப்பட்டாலும் படத்தை அப்போது ரிலீஸ் செய்ய படக்குழு தயாராக இல்லையாம்.

இது அம்மன் படம் தானே அதனால் படத்தை ஆடி மாதத்திற்கு ரிலீஸ் செய்யலாம் என்ற ஐடியாவில் இருக்கிறார்களாம். அதுவரை போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளை கவனிக்க படக்குழு தீர்மானித்துள்ளது. மே மாதம் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் கடும் போட்டிகளை எல்லாம் சமாளிக்க வேண்டி வரும் இல்லையா? அதனால் தான் ஒரே அடியாக ஜூலை மாதத்திற்கு ரிலீஸை தள்ளிவைத்துவிட்டனர். 

click me!