புனித் ராஜ்குமார் பொறுப்பை இனி நான் ஏற்று கொள்கிறேன்.. விஷால் அறிவிப்பு.. குவியும் பாராட்டுகள்..!

By vinoth kumarFirst Published Nov 1, 2021, 4:55 PM IST
Highlights

கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் என்றழைக்கப்பட்ட புனித் ராஜ்குமார் (46). கடந்த 29-ம் தேதி வீட்டில் இருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய மரணம் கர்நாடக மக்கள், கன்னட திரையுலகையும் தாண்டி பல தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. 

பிரபல நடிகர் புனித் ராஜ்குமாரிடம் இலவச கல்வி பெற்று வரும் 1800 மாணவர்களின் கல்வி செலவை ஏற்பதாக நடிகர் விஷால் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  

கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் என்றழைக்கப்பட்ட புனித் ராஜ்குமார் (46). கடந்த 29-ம் தேதி வீட்டில் இருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய மரணம் கர்நாடக மக்கள், கன்னட திரையுலகையும் தாண்டி பல தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பெங்களூருவில் உள்ள கன்டீரவா மைதானத்தில் வைக்கப்பட்டிருந்தது. கடந்த இரு நாட்களாக அவருடைய உடலுக்கு ரசிகர்களும், பொதுமக்களும் சாரை சாரையாகத் திரண்டு அஞ்சலி செலுத்தினர். தென்னிந்திய திரையுலகப் பிரபலங்களும் புனித் ராஜ்குமார் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். 

இதையும் படிங்க;- இந்த முறை ADMK ஜெயித்து இருந்தால் நான் தான் எம்ஜிஆர் என்று சொல்லியிருப்பார்.. எடப்பாடிக்கு எதிராக அன்வர் ராஜா?

குறிப்பாக அவரது உடலுக்கு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கண்ணீரோடு நெற்றியில் முத்தமிட்டு இறுதி அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து, அரசு மரியாதையிடன் அவரது நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும், புனித் ராஜ்குமார் உயிருடன் இருக்கும் போது 1800 மாணவர்களின் கல்வி செலவை ஏற்று அவர்களை படிக்க வைத்தார். 

இந்நிலையில், நடிகர் விஷால் புனித் ராஜ்குமாரால் கல்வி உதவிப்பெற்று வந்த 1800 மாணவர்களின் கல்விச் செலவை தானே ஏற்பதாக அறிவித்துள்ளார். ஆனந்த் சங்கர் இயக்கத்தில், விஷால், ஆர்யா மற்றும் பலர் நடிக்கும் 'எனிமி' படம் தமிழ், தெலுங்கில் நவம்பர் 4ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடந்தது. அதில் விஷால், ஆர்யா, மிர்ணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், இயக்குனர் ஆனந்த்சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க;- Puneeth Rajkumar உடலுக்கு கண்ணீரோடு முத்தமிட்டு இறுதி அஞ்சலி செலுத்திய கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை!

நிகழ்ச்சியில் பேசிய விஷால்;- புனித் ராஜ்குமார் சிறந்த நடிகர் மட்டுமல்ல எனக்கு நல்ல நண்பரும் கூட. அவருடைய இழப்பு திரையுலகத்திற்கு மட்டுமல்ல, சமூகத்திற்கும் தான். அவரைப் போன்ற ஒரு எளிமையான சூப்பர் ஸ்டாரை நான் இதுவரை பார்த்ததில்லை. பல சமூக சேவைகளை அவர் செய்து வருகிறார். புனித் ராஜ்குமாரால் 1800 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களது கல்விப் பொறுப்பை அடுத்த வருடம் முதல் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று அறிவித்துள்ளார்.

விஷால் அவருடைய அம்மா பெயரில் உள்ள தேவி அறக்கட்டளை மூலம் ஏற்கெனவே சில சமூக சேவைகளைச் செய்து வருகிறார். தற்போது புனித் ராஜ்குமார் செய்து வந்த சமூக சேவைகளையும் எடுத்துக் கொள்வதாக அறிவித்துள்ளது அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்து மழை குவிந்து வருகிறது. 

click me!