நடிகர் விஷாலின் தந்தையிடம் 86 லட்சம் மோசடி செய்த வடிவேலு அதிரடி கைது...

Published : Jun 25, 2019, 11:38 AM IST
நடிகர் விஷாலின் தந்தையிடம் 86 லட்சம் மோசடி செய்த வடிவேலு அதிரடி கைது...

சுருக்கம்

நடிகர் விஷாலின் தந்தையிடம் 86 லட்சம் மோசடி செய்தததாக மதுரையைச் சேர்ந்த கல்குவாரி உரிமையாளர் வடிவேலு என்பவர் சென்னை மத்தியை பிரிவு குற்றப்போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் விஷாலின் தந்தையிடம் 86 லட்சம் மோசடி செய்தததாக மதுரையைச் சேர்ந்த கல்குவாரி உரிமையாளர் வடிவேலு என்பவர் சென்னை மத்தியை பிரிவு குற்றப்போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் விஷால் தற்போது நடிகர் சங்க தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார். கடந்த ஜூன் 23 ல் தேர்தல் நடைபெற்று முடிந்தது. பதவிக்காலம் முடிவடைந்தும் நடிகர் சங்கம் கட்டப்படாமல் தள்ளிப்போனதால் அவரின் மீது பல அதிருப்திகள் எழுந்ததுள்ளது. இதனால் அவருடன் இருந்தவர்கள் பலர் பாக்யராஜ் அணிக்கு சென்றுவிட்டனர்.இன்னொரு பக்கம் அவர் தன் திருமணத்தை நடிகர் சங்க கட்டிடத்தில் தான் நடத்த வேண்டும் என உறுதியில் இருக்கிறார். அவருக்கு திருமண நிச்சயதார்தத்தையும் அவரின் பெற்றோர் அண்மையில் நடத்தினர்.

இந்நிலையில் கல்குவாரி பிசினஸ் செய்துவரும்  அவரின் அப்பாவிடம் ரூ 86 லட்சம் மோசடி செய்ததாக கல்குவாரி அதிபர் வடிவேலு என்பவரை சென்னை மத்திய குற்ற பிரிவு போலிசார் கைது செய்துள்ளனர்.அவர் அளித்துள்ள புகாரில் தன்னுடைய குவாரியில் இருந்து கருங்கல், ஜல்லி தருவதாக கூறி தொழிலதிபர் வடிவேலு என்பவர் தன்னிடம் ரூ. 86 லட்சம் பணம் வாங்கியதாகவும் ஆனால் அவர் கருங்கல், ஜல்லியை கொடுக்காமலும் கொடுத்த பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாக புகார் கூறியுள்ளார்.இதையடுத்து விஷாலின் தந்தை ஜி.கே. ரெட்டி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து மதுரையைச் சேர்ந்த கல்குவாரி உரிமையாளர் வடிவேலுவை கைது செய்துள்ளனர்.

முன்பு படத்தயாரிப்பாளராக பிசியாக இருந்த ஜீ.கே.ரெட்டி சினிமா தயாரிக்கும் வேலையை தனது இரு மகன்களிடம் ஒப்படைத்துவிட்டு முழுநேர கல்குவாரி அதிபராக மாறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!