
நடிகர் விமல் ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து கொண்டிருந்த நேரத்தில், அவரது விலை உயர்ந்த மற்றொரு செல் போன் திருடு போய்விட்டதாக, ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் சினிமாவில் துணை நடிகராக அறிமுகமாகி, பல்வேறு போராட்டங்களை கடந்து கதாநாயகன் என்கிற இடத்தை பிடித்துள்ளவர் விமல். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கிய முதல் திரைப்படமான ’பசங்க’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே இவருடைய எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான கிராமத்து கதையம்சம் கொண்ட, 'களவாணி'. சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
இதை தொடர்ந்து தூங்காநகரம், கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, உள்ளிட்ட பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து, தமிழ் சினிமாவில் நிலையான கதாநாயகனாவும் இடம் பிடித்துவிட்டார். அதே போல் 'மன்னர் வகையறா' என்கிற படத்தை தயாரித்து, அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார், சமீபத்தில் இந்த படத்தின் ஃபைனான்சியர் தன்னை ஏமாற்றி விட்டதாக பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்திருந்தார்.
நடிகர் விமல் நடிக்கும் படங்கள் குறித்த அப்டேட் வருகிறதோ இல்லையோ... இவரை கொடுக்கும் போலீஸ் புகார், மற்றும் இவர் மீது சிலர் அடிக்கடி குற்றம்சாட்டும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இந்நிலையில் தற்போது தன்னுடைய விலை உயர்ந்த செல் போனை, காணவில்லை என்று ஆன்லைன் மூலம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து காவல் ஆணையருக்கு நடிகர் விமல் கொடுத்துள்ள புகாரில் கூறியுள்ளதாவது, "நான் கடந்த 12 .9 .2021 அன்று, ECR -யில் நடந்த நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்தேன். அங்கு என்னுடைய விலை உயர்ந்த செல் போனை நான் அமர்ந்திருந்த இடத்தில் வைத்து விட்டு ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தேன். போட்டோ எடுத்து விட்டு திரும்பி பார்த்தபோது, என்னுடைய இருக்கையில் இருந்த செல்போனை காணவில்லை. மூன்று நாட்கள் தேடி பார்த்தும் கிடைக்காததால் செல் போன் மாடல் உள்ளிட்ட விவரங்களுடன் புகார் அளித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.