அடுத்தவாரம் கன்ஃபாம்..! சுட சுட வெளியான 'வலிமை' படத்தின் சூப்பர் அப்டேட்..!

Published : Sep 17, 2021, 01:43 PM IST
அடுத்தவாரம் கன்ஃபாம்..! சுட சுட வெளியான 'வலிமை' படத்தின் சூப்பர் அப்டேட்..!

சுருக்கம்

'வலிமை' திரைப்படத்தின் டீசர் மற்றும் ரிலீஸ் தேதி எப்போது வெளியாகும் என அஜித் ரசிகர்கள், கார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் அடுத்தவாரம் கண்டிப்பாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போன்று, டீசர் வெளியாகும் என நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.  

'வலிமை' திரைப்படத்தின் டீசர் மற்றும் ரிலீஸ் தேதி எப்போது வெளியாகும் என அஜித் ரசிகர்கள், கார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் அடுத்தவாரம் கண்டிப்பாக ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது போன்று, டீசர் வெளியாகும் என நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.

தல அஜித்தை வைத்து, இயக்குனர் எச் வினோத், இரண்டாவது முறையாக இயக்கியுள்ள திரைப்படம் 'வலிமை'. இந்த படத்தை பிரபல பாலிவுட் பட தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் படமாக்கப்படாமல் இருந்த சண்டை காட்சியையும் படக்குழு முடித்து விட்ட நிலையில், போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

'வலிமை' படத்தை தீபாவளிக்கு வெளியிடும் முயற்சியில் படக்குழுவினர் உள்ளதாக கூறப்பட்டாலும், தற்போது வரை படம் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. எனவே தீபாவளிக்கு இப்படம் ரிலீஸ் ஆகுமா என்கிற சந்தேகம் ரசிகர்கள் மனதில் நீடித்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் நேற்று காலை முதலே, வலிமை டீசர் என்கிற ஹாஸ்டேக் ட்விட்டரில் வைரலாகி வரும் நிலையில், அஜித் ரசிகர்கள் பலர் டீசர் விரைவில் வெளியாக வேண்டும் என தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விரைவில் தல தீபாவளியாக வலிமை வர உள்ளதாகவும், டீசரும் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து, சில நம்ப தகுந்த வட்டாரங்கள் அடுத்த வாரம், 'வலிமை' டீசர் வெளியாகும் என்பது போன்ற தகவல்களை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே மீண்டும், 'வலிமை டீசர்' என்கிற ஹேஷ்டேக் தற்போது அஜித் ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. டீஸருடன் இணைந்து, 'வலிமை' படம், தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படுமா? என்கிற தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Nagabandham Review : நாகபந்தம் படம் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம் இதோ
Box Office Clash: பாக்ஸ் ஆபிஸில் ரஜினிக்கு டஃப் போட்டி.. குறுக்கே வந்த தனுஷ், சிரஞ்சீவி.. சாதனை படைக்குமா ஜெயிலர் 2?