
தமிழ் திரையுலகை பொருத்தவரை தாங்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்துக்காக தங்களுடைய உடலை எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று வருத்தி நடிக்கும் வெகு சில நடிகர்களின் பட்டியல் முக்கியமானவர் சீயான் விக்ரம்.
தற்பொழுது இவருடைய நடிப்பில் எடுத்து முடிக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள தங்கலான். மாபெரும் பொருட்செலவில் பல உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் தற்பொழுது உருவாகியுள்ளது. நடிகர் விக்ரம் இந்த திரைப்படத்திற்காக தன்னை பல விதத்தில் வருத்திக்கொண்டு நடித்து முடித்திருக்கிறார்.
இதையும் படியுங்கள் : சூரரைப் போற்று இந்தி ரீமேக் ரிலீஸ் தேதி திடீரென மாற்றம்!
தங்கலான் படப்பிடிப்பின்பொழுது ஏற்பட்ட விபத்தில் அவருடைய விலா எலும்பில் அடிபட்டு சிறிது காலம் அவர் ஓய்வில் இருந்து, மீண்டும் படப்பிடிப்புக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அந்த பட வேலைகள் முடிந்துள்ளதால் தாடியை முற்றிலும் எடுத்து விட்டு ஒரு கிளீன் ஷேவ் லுக்கில் பளபளவென்று காட்சியளிக்கின்றார் விக்ரம்.
ஆனால் அவருடைய அடுத்த திரைப்படம் குறித்த தகவல் இன்றளவும் எதுவும் வெளியாகவில்லை, ஆகவே இது எந்த படத்திற்காக அவர் வைத்திருக்கும் கெட்டப் என்று அவருடைய ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். தங்கலான் படம் விரைவில் வெளிவர உள்ள நிலையில், பல ஆண்டுகளாக இன்னும் வெளிவராமல் இருக்கும் விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படமும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
துரவநட்சத்திரம் படத்தின் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்சனையால், இந்த படத்தை தற்போது இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தானே தயாரித்து வெளியிடவுள்ளார்.
இதையும் படியுங்கள் : 'குக் வித் கோமாளி' வைல்ட் கார்ட் சுற்றில் வெற்றி பெற்று ஃபைனலுக்கு சென்றது யார்?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.