அதான் விஜய் சேதுபதியே சொல்லிட்டாரே... வலிமையில் அஜித்துக்கு வில்லனா புக் பண்ணுங்கப்பா...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Feb 05, 2020, 05:54 PM IST
அதான் விஜய் சேதுபதியே சொல்லிட்டாரே... வலிமையில் அஜித்துக்கு வில்லனா புக் பண்ணுங்கப்பா...!

சுருக்கம்

கேரக்டர் சிறப்பாக அமைந்தால் எந்த ஹீரோவுடனும் இணைந்து நடிக்க தயாராக உள்ளேன் என்று ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்துள்ளார். மேலும் தல அஜித்துடன் நடிப்பதற்கு மிகவும் ஆவலாக இருப்பதாக கூறியுள்ளார். 

மக்கள் மனதில் அப்படி ஒரு இடத்தை பிடித்ததால் தான் விஜய் சேதுபதிக்கு மக்கள் செல்வன் என்ற பட்டத்தை அவரது ரசிகர்கள் கொடுத்துள்ளனர். புதுமுக நடிகர்களின் ஒரு படம் ஹிட்டாகிவிட்டாலே அவர்கள் செய்யும் பந்தாவை பார்க்க முடியாது. ஆனால் அடிமட்டத்தில் இருந்து கஷ்டப்பட்டு வந்த விஜய் சேதுபதி, அடுத்தடுத்து ஹிட்டு கொடுத்து கெத்து காட்டினாலும், ரசிகர்களிடம் அன்பாக பழகி வருகிறார். 

நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்ற எண்ணம் இல்லாமல், முன்னணி நடிகர்களின் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் கூட நடித்து வருகிறார். அதிலும் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ள பேட்ட, விக்ரம் வேதா படங்கள் தனி ரகம். தற்போது மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார். 

இதனிடையே படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விஜய் சேதுபதி, தனக்கு ஹீரோவாக மட்டுமே நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை, கேரக்டர் சிறப்பாக அமைந்தால் எந்த ஹீரோவுடனும் இணைந்து நடிக்க தயாராக உள்ளேன் என்று ஓபன் ஸ்டேட்மெண்ட் கொடுத்துள்ளார். மேலும் தல அஜித்துடன் நடிப்பதற்கு மிகவும் ஆவலாக இருப்பதாக கூறியுள்ளார். 

தற்போது தல அஜித் - ஹெச்.வினோத் - போனிகபூர் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் வலிமை. இந்த படத்திற்கு ஹீரோயின் யார் என்றே தெரியாத நிலையில், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சரியான நபரை தேடி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் சேதுபதியின் இந்த பேச்சை கேட்ட தல ரசிகர்கள், அவரே சொல்லிட்டாரே உடனே வலிமை படத்துக்கு வில்லனாக புக் பண்ணுங்க என கமெண்ட் அடித்து வருகின்றனர்.  
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!